ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு

திருக்குறளின் ஒப்பில்லா தன்மையை பிளேட்டோ, அரிஸ்டாட்டில், மார்க்கஸ் அரேலியஸ், தாந்தே, மாக்கிய வெல்லி, ஸ்பினோசா, தம்மபதம், மனுநூல், கெüடலீயம், சுக்கிரநீதி, கீதை ஆகிய பிற நூல்களுடன் ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்து விளக்குகிறது இந்த நூல்.
ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு
Updated on
1 min read

ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு, ப.மருதநாயகம், பக்.400, ரூ.380, சாரதா பதிப்பகம், சென்னை-600 014, ✆ 97907 06548.

திருக்குறளின் ஒப்பில்லா தன்மையை பிளேட்டோ, அரிஸ்டாட்டில், மார்க்கஸ் அரேலியஸ், தாந்தே, மாக்கிய வெல்லி, ஸ்பினோசா, தம்மபதம், மனுநூல், கெüடலீயம், சுக்கிரநீதி, கீதை ஆகிய பிற நூல்களுடன் ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்து விளக்குகிறது இந்த நூல்.

இரு பகுதிகளைக் கொண்ட இந்த நூலின் இரண்டாம் பகுதி செனகா, எல்லீசர், அயோத்திதாசர், விபுலானந்தர், தெ.பொ.மீ., மு.வரதராசனார் போன்ற அறிஞர்களின் பார்வையில் திருக்குறள் பெறும் மதிப்பீடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளும் அடங்கிய தொகுப்பாக மலர்ந்திருப்பதுதான் 'ஒப்பில் வள்ளுவம்' விரிவாக்க பதிப்பு.

மண்ணுலக வாழ்வு குறித்து பிளேட்டோ கொண்டிருந்த கருத்துகள், வள்ளுவத்தின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளன.

அரிஸ்டாட்டில் கருத்துகளுடன், வள்ளுவரின் நட்பின் ஆழமான கருத்துகள்ஆராயப்பட்டுள்ளன. வாழ்வின் அவலம், மார்க்கஸ் அரேலியஸ் தத்துவத்துடன் ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார். அறிஞர் தாந்தே, இப்பிறப்பில் ஒருவர் செய்யும் பாவத்துக்கு நரகத்தில் கிடைக்கும் தண்டனையைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

வள்ளுவரோ அச்சுறுத்துவதோடு, ஆசை காட்டுதல், அன்போடு கேட்டுக் கொள்ளுதல், ஆணையிடுதல், நன்மை - தீமைகளை நிரல்படக்கூறி, கேட்பவரின் முடிவுக்கு விட்டு விடுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டுள்ளார்.

நாடும் படையும், மன்னனும் குடியும், அன்பின் அருமை, நீத்தார் பெருமை போன்றவை மேலைத் தத்துவவாதிகளின் கருத்துகளும், வள்ளுவரின் கோட்பாடுகளும் ஒப்பிடப்பட்டு, மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மனுநூல் தலைப்பில் 'ஒரு குலத்திற்கு ஒரு நீதி', கீதை தலைப்பில் 'குல தர்மங்களும், குல கேடர்களும்', காமசூத்திரம் தலைப்பில் 'பெண் இன்பமும் பெண் இழிவும்', 'வள்ளுவரும் வடநூலாரும்', 'வள்ளுவமும் மேலை ஒழுக்க இயல்களும்' பேசப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com