ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)- எழில்முத்து; பக். 160; ரூ. 200; சத்யா என்டர்பிரைசஸ், சென்னை-600 094, ✆ 9080529054
வலிமையற்ற அண்டை நாடுகளை நேர்மையற்ற முறையில் கைப்பற்றுவதையும், கியூபாவை கைப்பற்றுவதன் மூலம், உலகின் தலைமையை அடைய மிருகத்தனமாக சண்டையிடுவதையும் விட்டுவிட்டு, அமெரிக்கா தனது சொந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தினால் நிச்சயமாக மேன்மையடையும்.
ஃபிடல் காஸ்ட்ரோ குறித்த நூல் என்றாலும், அவரைப் பற்றி மட்டுமில்லாமல் அங்கு புரட்சிக்கு வித்திட்ட ஹொúஸ மார்த்தி குறித்தும், புரட்சியில் அவரின் பெரும்பங்கு குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 'கியூபாவை நமது உயிரைத் தியாகம் செய்யும் பீடமாகக் கருத வேண்டும்; நம்மை உயர்த்திக் கொள்ளும் மேடையாக அல்ல' என்ற அவரின் வார்த்தைகள் நாட்டுப்பற்று கொண்ட அனைவரும் நெஞ்சில் பதிந்துகொள்ள வேண்டிய வரிகளாகும்.
உலகில் இருந்து பொதுவுடைமை சிந்தனையும், பொதுவுடைமைக் கட்சிகளும் உதிர்ந்து வருவதாக சில வலதுசாரிகள் கூறி வருகின்றனர். ஆனால், 'நான் நினைத்திருந்தால் ஒரு மருத்துவராக தொழில் செய்து நிறைய சம்பாதித்திருக்க முடியும். ஆனால், எனக்குள் இருக்கும் இரண்டு நோக்கங்களுக்கு எதிராக அதை நான் செய்ய விரும்பவில்லை. நான் சோஷியலிஸ்டாக பொதுவுடைமை சிந்தனையாளனாகவே பயணிக்க விரும்பு
கிறேன்' என்று கூறிய சே குவேராவின் வரலாறு பூமியில் நிலைத்திருக்கும் வரை, பொதுவுடைமை சித்தாந்தம் அழியாது. அதைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை வேண்டுமானால் குறையலாம்.
ஃபிடல் காஸ்ட்ரோ குறித்து மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் உள்பட பலர் ஏற்கெனவே எழுதிய நூல்கள் உள்ள நிலையில், காஸ்ட்ரோ குறித்த எளிய அறிமுகத்துக்கு இதுவும் நல்லதொரு நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India







