டெல்லி சுல்தான்கள்- ராம் அப்பண்ணசாமி; பக். 200; ரூ. 250; கிழக்கு பதிப்பகம், சென்னை- 600 014, ✆ 044- 4200 9603.
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் என்றால் அது முகலாயர்கள்தான் என்பது பெரும்பாலானோர் கருத்து. ஆனால், முகலாயர்களின் வருகைக்கு முன்பே இஸ்லாமிய ராஜ்ஜியத்துக்கு அடிகோலியவர்கள் டெல்லி சுல்தான்கள்.
கோரி முகமதுவிடம் அடிமையாக இருந்த குத்புதீன் ஐபக் கி.பி. 1208- ஆம் ஆண்டில் தன்னை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட புள்ளியில் இருந்து தில்லியில் சுல்தான்களின் ஆட்சி தொடங்குகிறது. இவரைத் தொடர்ந்து, 1290-ஆம் ஆண்டு வரை எட்டு சுல்தான்கள் தில்லியை ஆண்டனர். இவர்களை அடிமை வம்சத்தினர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அடிமை வம்சத்தின் வீழ்ச்சியை அடுத்து 1290 முதல் 1320-ஆம் ஆண்டு வரை கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம் (1320-1413), சையீத் வம்சம் (1413-1451), லோதி வம்சம் (1451-1526) தில்லியை ஆண்டன. இதன் பிறகுதான் இந்தியாவில் முதன்முதலில் பாபர் தலைமையில் முகலாயர்களின் ஆட்சி ஆரம்பமாகிறது.
பாபர், அக்பர், ஷாஜஹான் உள்ளிட்ட முகலாய பாதுஷாக்கள் வரலாற்றில் நினைவுகூரப்படுவதைப்போல தில்லி சுல்தான்கள் ஏன் போற்றப்படுவதில்லை? ஹிந்து ஆட்சியாளர்களுக்கு எதிரான படையெடுப்பு, கொள்ளையடிப்பு, கொடுங்கோல் ஆட்சி, அடக்குமுறை ஆகியவைதான் சுல்தான்களின் வரலாற்றுப் புகழை மழுங்கடித்தனவா? என்பதை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சுல்தான்கள், முகலாயர்களின் ஆட்சியில் இருந்த புகழ்பெற்ற ஆளுமைகள் யார்? அவர்களது ஆட்சியில் நிர்வாகம், பொருளாதாரம் எப்படி இருந்தன? மத அணுகுமுறை எத்தகைய தன்மையாய் இருந்தது என்பதை பரந்துபட்ட ஆராய்ச்சியின் துணையுடன் இந்நூல் விவரிக்கிறது. பொருத்தமான புகைப்படங்களை ஆங்காங்கே இணைத்திருப்பது இந்நூலுக்கு வலு சேர்க்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை




