மகாத்மா காந்தி

மகாகவி பாரதியாரும், திரு.வி.க.வும் போற்றிய காந்தியை உலக அறிஞர்கள் மிகவும் உயர்வாகவே மதிப்பீடு செய்துள்ளதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
மகாத்மா காந்தி
Updated on
1 min read

மகாத்மா காந்தி -மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன்- தமிழில்-வெ.சாமிநாத சர்மா; பக்.362; ரூ.360; புரட்சி பாரதி பதிப்பகம், சென்னை - 600 055, ✆ 90430 50666.

மகாத்மா காந்தியை உலக அறிஞர்கள் எவ்வாறு கணித்தனர் என்பதை குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதிய மூல நூலின் தமிழாக்கமே இந்த நூல்.

காந்தி குறித்து படிப்பது இந்திய தேசிய இயக்கத்தையும், இந்திய விடுதலையையும் படிப்பதற்கு ஒப்பானது. அவர் வாழ்ந்து காட்டிய நெறிகளையும், உலகமே வியந்து பார்க்கும்; அவர் போற்றி வளர்த்த சிறந்த பண்பாட்டை எதிர்கால சந்ததியினருக்கு நினைவூட்டி நல்வழிப்படுத்தும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.

ஓர் எளிய மனிதர், ஆனால் உலக அறிஞர்களால் மதிக்கப்பட்டவர். நாவன்மை மிக்க அனைவரும் மகாத்மா காந்தியின் அமைதிக்கு முன்னர் நாவடக்கி நின்றனர். அவரிடம் வாழ்த்து பெறுவதற்கு இந்தியத் தலைவர்களெல்லாம் போட்டிபோட்டுக் கொண்டு நின்றது எதற்காக என்பதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் விவரிக்கிறது.

இந்திய தேசிய இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, அதை எளியவர்களின் கைகளுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமைக்கு உரியவர் மகாத்மா காந்தி. வேற்றுமைகளைக் களைந்து இந்தியத் துணைக் கண்டத்தை ஒன்றுபட்ட நாடாக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, ஜாதி, மதப் பூசல்களைக் களைந்தெறிந்து இந்தியர்களுக்குப் புத்தொளி காட்டியதையும் உலக அறிஞர்கள் இந்த நூலில் எடுத்துரைத்துள்ளனர்.

மகாகவி பாரதியாரும், திரு.வி.க.வும் போற்றிய காந்தியை உலக அறிஞர்கள் மிகவும் உயர்வாகவே மதிப்பீடு செய்துள்ளதை இந்நூல் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com