சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மண்ணும் மக்களும்

ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் முழு நேரமாக இலக்கியப் பணியுடன் பத்திரிகை, எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வரும் நூலாசிரியரின் தொலைநோக்குப் பார்வையுடன் வெளிவந்துள்ள நூல் இது.

News image
Updated On :27 ஜூலை 2026, 3:38 pm IST

மண்ணும் மக்களும் - உதயை மு. வீரையன்; பக். 164; ரூ. 160; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-600 050. ✆ 044- 2625 1968.

ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் முழு நேரமாக இலக்கியப் பணியுடன் பத்திரிகை, எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வரும் நூலாசிரியரின் தொலைநோக்குப் பார்வையுடன் வெளிவந்துள்ள நூல் இது.

'வறுமையும், ஏற்றத் தாழ்வும் ஒழிக்கப்படும்போதே மக்கள் விடுதலை பெற்றவர்களாக வாழ முடியும். மக்கள்தொகைப் பெருக்கத்துடன் விலைவாசியும் வேலையில்லாத் திண்டாட்டமும் போட்டியிடுகின்றன. புதிய விடியலும் புதிய வாழ்வும் பெற மக்கள் விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியம்' என்று கூறும் நூலாசிரியர் உள்ளூர் முதல் உலக அளவிலான 31 விஷயங்களை தன் பார்வையில் தொகுத்து கட்டுரைகளை எழுதியுள்ளார்.

'மண்ணும் மக்களும்' என்ற நூலின் தலைப்பைக் கொண்ட முதல் கட்டுரையிலேயே தேசிய அளவிலான விவசாயிகளின் பிரச்னைகளை அலசியுள்ளார்.

'இயற்கையை ஏற்பதா, எதிர்ப்பதா?' எனும் கட்டுரையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம், 'மக்களின் உயிர்வாழும் உரிமை'யில் காற்று மாசு, 'இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்?', 'பழங்குடி மக்களின் பரிதாபம்', 'தலைநகர் படும் பாடு', 'சித்திரவதைக்கு எதிராக..', 'பெருகும் பிளாஸ்டிக் குப்பைகள்', 'நதிநீர் இணைப்பும் நாமும்', 'பாதை மாற்றும் போதை', 'உச்சத்தைத் தொடும் மக்கள்தொகை', 'நெய்வேலியில் ஏன் இந்த நெருக்கடி?, 'பேரிடரில் சிக்கிய அப்பாவிகள்', 'ஊழல் எனும் நச்சு மரம்', 'கழிவுகள் இறக்குமதிக்குக் கண்டனம்' , 'வணிகப் போர் வளையத்தில் இந்தியா, 'உதவியும் உலக அரசியலும்', ஜி.எஸ்.டி.யை அலசும் 'சாதனை என்பது இதுதானோ?' 'கல்விக் கொள்கையில் முரண்பாடுகள்', 'மணிப்பூரில் அமைதி திரும்புமா?' , 'வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்', 'போரும் அமைதியும்', 'நடிகர்கள் செய்யும் அரசியல்', 'இந்திய மாணவர்களின் எதிர்காலம்' என்று ஒவ்வொரு கட்டுரையும் விரிவாக அலசுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.