என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!
/

சிக்மண்ட் ஃபிராய்ட் - வாழ்வும் உளவியலும்

கார்ல் மார்க்ஸின் சிந்தனைகளும், சார்லஸ் டார்வினின் கண்டுபிடிப்புகளும் ஆரம்பத்தில் எப்படி எதிர்ப்பை எதிர்கொண்டு மனித இனத்தை அசைத்துப் பார்த்ததோ அதேபோன்றுதான் ஃபிராய்டின் கோட்பாடுகளும் என்பதை இந்நூல் விளக்குகிறது.

News image
Updated On :8 ஜூன் 2026, 5:22 pm IST

சிக்மண்ட் ஃபிராய்ட் - வாழ்வும் உளவியலும்; எஸ்.சரத்குமார்; பக். 144; ரூ. 185; கிழக்கு பதிப்பகம், சென்னை-600 014, ✆ 044-4200 9603.

இன்றைய பரபரப்பான நவீன வாழ்க்கைச் சூழலில் உளவியல் என்ற வார்த்தை வெகு இயல்பாகிவிட்டது. உளப் பகுப்பாய்வின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் ஃபிராய்ட், மனித மனதின் பரிமாணங்கள் குறித்து வகுத்த கோட்பாடுகளை இந்நூல் பகுப்பாய்வு செய்துள்ளது.

மனம், மனச் சஞ்சலம், மனதின் உள்ளடுக்குகள், மனதுக்கும் அன்றாட வாழ்வுக்கும் இடையேயான தொடர்பு, மனதின் விசித்திர செயல்பாடுகள், மனநோய், கனவுகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள், அடக்கப்பட்டு தீராத விருப்பங்களின் தாக்கம் என மனம் சார்ந்து இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்னைகளையும் 19-ஆம் நூற்றாண்டிலேயே ஃபிராய்ட் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த 'மனம்' எனும் ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்துக்குள் கொண்டு வந்ததுடன் மட்டுமல்லாது, கண்ணுக்குப் புலப்படாத மனித மனதுக்கு உருவம் கொடுக்கவும் முயற்சித்த புரட்சிகர சிந்தனையாளரின் கருத்துகளை எளிய தமிழில் எடுத்துரைக்கிறார் மனநல மருத்துவரான நூலாசிரியர்.

இன்றைக்கு உளவியல் துறை எவ்வளவோ முன்னேறியிருந்தாலும் மனித மனதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் நீண்ட பயணத்தில் ஃபிராய்டின் துணை அவசியம் என்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.

கார்ல் மார்க்ஸின் சிந்தனைகளும், சார்லஸ் டார்வினின் கண்டுபிடிப்புகளும் ஆரம்பத்தில் எப்படி எதிர்ப்பை எதிர்கொண்டு மனித இனத்தை அசைத்துப் பார்த்ததோ அதேபோன்றுதான் ஃபிராய்டின் கோட்பாடுகளும் என்பதை இந்நூல் விளக்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.