தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வெற்றிக்கு வழிகாட்டுகிறார் வ.உ.சிதம்பரனார்

வ.உ.சி. சிறையில் இருந்தபோதும், போராட்டத்தில் ஈடுபட்டபோதும் எழுதிய மொழி பெயர்ப்பு நூல்களைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்.

News image
Updated On :22 ஜூன் 2026, 7:40 pm IST

வெற்றிக்கு வழிகாட்டுகிறார் வ.உ.சிதம்பரனார்- அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி; பக்.248; ரூ.240; அனிதா பதிப்பகம், திருப்பூர்-641 687; ✆ 94437 22618.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, பிரிட்டிஷாருக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கி, சிறையில் செக்கிழுத்து தண்டனையை அனுபவித்து 'செக்கிழுத்த செம்மல்' என்றழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார், இந்தியர்கள் யாராலும் மறக்க முடியாதவர். அவருடைய புகழை உலகெங்கும் பரப்பும் நோக்கில் செயல்பட்டுள்ள நூலாசிரியர், வ.உ.சி. சிறையில் இருந்தபோதும், போராட்டத்தில் ஈடுபட்டபோதும் எழுதிய மொழி பெயர்ப்பு நூல்களைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்.

இந்த நூலில் ஒவ்வொரு மனிதனும் சுய முன்னேற்றம் அடையவும், தன்னம்பிக்கையை வளர்த்து வாழ்வில் வெற்றி பெறவும் உதவும் வகையிலான கருத்துகளை வ.உ.சி. அன்றே தேடிப் பிடித்து தமிழாக்கம் செய்துள்ளதைப் பார்க்கும்போது, தேச நலனில் அவருக்கான அக்கறையை உணர முடிகிறது.

அறிஞர் ஜேம்ஸ் ஆலன் ஆங்கிலத்தில் எழுதிய 'பவர் ஆஃப் தி ஆர்ட்' எனும் நூலை 'அகமே புறம்' என்ற தலைப்பிலும், 'ஏஸ் ஏ மேன் திங்கத்' எனும் நூலை 'மனம் போல் வாழ்வு' எனும் தலைப்பிலும், 'ஃப்ரம் பாவர்டி டூ பவர்' என்ற நூலின் முதல்

பகுதியை 'சாந்திக்கு மார்க்கம்' என்ற தலைப்பிலும், 'தி பெத் ஆஃப் பிராஸ்பெரிடி' என்பதை 'வலிமைக்கு மார்க்கம்' எனும் தலைப்பிலும் மொழிபெயர்த்துள்ளார். இந்த நான்கின் முக்கிய பகுதிகள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

'எந்த நூலை எடுத்தாலும் முன்பு இருந்த நூலாசிரியர்கள் கூறியதை அலசிப் பார்த்து புதிய உரையைக் காணும் வ.உ.சி. தனது மொழிபெயர்ப்பில் துணிவு, உணர்ச்சி, வேகம் உள்ளிட்ட எதையும் தன்னிலையில் இருந்து நோக்கும் தன்மையைக் கொண்டு, எளிய நடையில், பாமரரும் அறியும் வகையில் தன்னம்பிக்கை கருத்துகளை இந்த நூல் முழுவதும் விதைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.