நாடகமே உலகம் (கட்டுரைகள்) - பத்மஸ்ரீ அவ்வை டி.கே. சண்முகம்; தொகுத்தவர்: முனைவர் டி.கே.எஸ். கலைவாணன்; பக். 200; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை -600 017, ✆ 044-2434 2810.
டி.கே.சண்முகம் ஆற்றிய சொற்பொழிவுகள், பிற இதழ்களில் அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள், தவிர சென்னை, மலேசிய வானொலிகளில் ஆற்றிய உரைகளை டி.கே.எஸ். கலைவாணன் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்.
நூலில் சங்கரதாஸ் சுவாமிகள், ராஜா அண்ணாமலை செட்டியார், அவரது குமாரர் எம்.ஏ.முத்தையா செட்டியார், ம.பொ. சிவஞானம், பெரியார், ப.ஜீவானந்தம், அண்ணா, தியாகி விசுவநாததாஸ், மலேசிய அறிஞர் கோ. சாரங்கபாணி ஆகியோருடன் ஏற்பட்ட பழக்கங்கள் குறித்து இந்நூலில் அதிகம் பேசப்பட்டுள்ளது.
அதுவரை நாரதராகவே நடித்து வந்த டி.கே. சண்முகத்தை எப்போது கதாநாயகனாக்கப் போகிறீர்கள் என்று சுவாமிகளிடம் கேட்கப்பட்டது. டி.கே.எஸ்.ஸýக்கு சங்கரதாஸ் சுவாமிகள் 'அபிமன்யூ சுந்தரி' நாடகத்தை ஒரே இரவில் எழுதிக் கொடுத்ததை பெருமையுடன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தனது நாடகக் குழுவினர் நடத்திய சிவலீலா, அவ்வையார், குமாஸ்தாவின் பெண், ராஜராஜன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற நாடகங்களின் உருவாக்கம், அதன் வெற்றி குறித்து எழுதியிருப்பதுடன் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜன், அவ்வையார் நாடகங்களின் வெற்றியே பின்னாளில் திரைப்படமாக உருவாக்கம் பெறவும் காரணமாக அமைந்தது என்றும் கூறியுள்ளார்.
பெரியாரைச் சந்திக்க அவரது அலுவலகம் சென்றபோது, வரவேற்று உபசரித்தவர் ப.ஜீவானந்தம்தான். தொடர்ந்து நாடகக் குழுவினருக்கு பெரியார் அளித்த விருந்து குறித்தும் நூலில் விரிவாக உள்ளது. நாடக உலகினர் அவசியம் படிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!







