விஜய பாரதம் தீபாவளி மலர்-2026
தொழிலில் பெரும் சாதனை படைத்த 39 பேரின் வெற்றிக் கதைகள் இந்த மலரில் இடம்பெற்றுள்ளது புதுவகையான அரிய முயற்சியாகும்.

விஜய பாரதம் தீபாவளி மலர்-2026; பி. வெள்ளைத்துரை, பக்.484; ரூ.150; பாரதிய கலாசார சமிதி, சென்னை-600 084. 044-2642 1271.
குடும்பப் பாரம்பரியத்தின் பின்புலம், பொருளாதார பலம், பெரும் கல்வி அறிவு, நெருக்கடியான காலங்களில் தாங்கிப் பிடிக்கும் பாதுகாப்பு அரண் போன்றவை எதுவுமே இன்றி தங்கள் பயணத்தைத் தொடங்கி தங்கள் தொழிலில் பெரும் சாதனை படைத்த 39 பேரின் வெற்றிக் கதைகள் இந்த மலரில் இடம்பெற்றுள்ளது புதுவகையான அரிய முயற்சியாகும்.
இந்தத் தொழிலதிபர்கள் எல்லாம் ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், நாமக்கல், சேலம் போன்ற ஊர்களில் இருந்து சாதனை படைத்திருப்பது பிரமிக்க வைப்பதாகும்.
அந்த வகையில், பாரம்பரிய உடையான வேஷ்டிக்கு உயரிய மரியாதை ஏற்படுத்திய ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், 85 சதவீதத்துக்கும் அதிகமாக பெண் ஊழியர்களுக்கு வாய்ப்பளிக்கும் குமரகிரி ஸ்பின்னர்ஸ் நிர்வாக இயக்குநர் டி.ஆர்.தங்கவேல், மாஸ்கோவில் கானல் நீரான மருத்துவர் கனவுக்குப் பின்னர் பல தோல்விகளில் இருந்து மீண்டு வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ள கோவை சஜு பாஸ்கர், 600-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் அகாதெமி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.டி.வைஷ்ணவி, பனியன் துறையில் முன்னோடியான ஆம்ஸ்ட்ராங் இ.பழனிசாமி, கிளாஸிக் போலோ நிர்வாக இயக்குநர் டி.ஆர்.சிவராம், விவசாய குடும்பத்தில் பிறந்து வார்சா குழுமம் நிறுவிய ராஜா எம்.
சண்முகம், கோழிப் பண்ணை தொழிலில் சாதனை படைத்துவரும் பொன்னி சிங்கராஜ், ஊழியராக சேர்ந்து சாந்தி சாரீஸ் நிறுவனத்தை உருவாக்கிய லதா சரவணன், தையல் தொழிலாளியாக இருந்து ஏற்றுமதியாளராக உயர்ந்த கே.ஜி. கணேஷ் உள்ளிட்ட பலரின் பேட்டி புது தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.
நூற்றாண்டு நாயகர் பிரிவில், கவியரசு கண்ணதாசன், தமிழுக்குத் தொண்டு செய்த இரா.இராதாகிருஷ்ணன் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளும், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், விமலா ரமணி, சுபா, தேவிபாலா உள்ளிட்டோரின் சிறுகதைகளும் மலருக்கு அணிசேர்க்கின்றன.
சுதந்திரப் போராட்ட வீரர் இளைஞர் குதிராம் போஸ், காலனி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய வருணகுலத்தான், மாவீரர் சிவகங்கை தளவாய் தாண்டவராயப் பிள்ளை போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகளுடன் விஜயபாரதம் தீபாவளி மலர் பல வண்ண மலர்களால் கோக்கப்பட்ட கதம்ப மாலையாக மணம் வீசுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

