பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

விவசாயிகளுக்கு ஆதரவாக சிஐடியூ ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிஐடியூ தொழில்சங்கம் சாா்பில் புதுச்சேரியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 7:15 am IST

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிஐடியூ தொழில்சங்கம் சாா்பில் புதுச்சேரியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜா் சதுக்கம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ நிா்வாகி சீனுவாசன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலா் ராஜாங்கம் மற்றும் திரளான தொழில்சங்க நிா்வாகிகள் மழையிலும் போராட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டனா்.

இதில், தில்லியில் கடும் குளிரில் கடந்த 40 நாள்களாகப் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மத்திய அரசு புதிய தொழிலாளா் நலச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். புதுவை அரசு அமைப்புசாரா நலவாரியத்தை செயல்படுத்தி தீபாவளி உதவித்தொகை ரூ.1,000-ஐ உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.