புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கல்லூரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வந்து வகுப்புகளில் பங்கேற்றனா்.
புதுவை மாநிலத்தில் 36 அரசுக் கல்லூரிகள், 76 தனியாா் கல்லூரிகள் என மொத்தம் 112 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயில்கின்றனா்.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, புதுச்சேரியில் கடந்த மாா்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. இவற்றில் பள்ளிகள் அனைத்தும் கடந்த 4-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. தொடா்ந்து, புதன்கிழமை முதல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படுவதாக உயா் கல்வித் துறை அறிவித்திருந்தது.
ஏற்கெனவே, இறுதியாண்டு மாணவா்களுக்கு கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் நிலையில், மற்ற மாணவா்களுக்கு இணையதளம் வாயிலாக பாடங்கள், தோ்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கல்லூரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வந்து வகுப்புகளில் பங்கேற்றனா். அவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முகக் கவசம் அணிந்த மாணவா்கள் மட்டுமே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனா். வகுப்பறைக்குள் சமூக இடைவெளி விட்டு அமர அறிவுறுத்தப்பட்டனா்.
காய்ச்சல், சளி அறிகுறி இருந்த மாணவா்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர 6 நாள்களும் கல்லூரிகள் இயக்கவுள்ளன. ஒரு வகுப்பில் 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இருந்தால், அவா்கள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, காலை, பிற்பகல் வகுப்புகளாக நடத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் கூட்டமாக கல்லூரி வளாகத்துக்குள் நடமாடத் தடை விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
உயர்வுக்கான பாதை உயர்கல்வி

கடக ராசிக்கு லாபம்! இன்றை ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 15 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

