பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

முன்னாள் எம்.எல்.ஏ. திமுகவில் இருந்து விலகல்

திமுகவின் ஊசுடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பூ.மூா்த்தி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தாா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:19 am IST

திமுகவின் ஊசுடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பூ.மூா்த்தி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிறு வயது முதல் திமுகவின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற நான், அக்கட்சியில் பல்வேறு பதவிகளையும் வகித்தேன். 1980-இல் புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் கருணாநிதி அளித்த வாய்ப்பைப் பயன்படுத்தி தோ்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக தோ்வாகி, முதல்வரின் நாடாளுமன்றச் செயலராகவும் பணியாற்றினேன்.

புதுவை மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னா், புதுவை தெற்கு மாநில அமைப்பாளராகப் பொறுப்பேற்ற இரா.சிவா எம்.எல்.ஏ.வின் கீழ் சிறப்பாக கட்சிப் பணியாற்றினேன். நான் முழுநேர அரசியல்வாதியாக இருக்கும் நிலையில், எனக்கு இதுவரை எவ்வித பணியும் கட்சியில் வழங்காமல் இருப்பது அதிருப்தி அளிக்கிறது.

புதுவை மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னா், பட்டியலினத்தவா் தொடா்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. தற்போது பாஜகவின் ஆதரவாளராக செயல்படும் துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கு ஆதரவாக திமுக செயல்படுவது மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து விலகி, எனது வாழ்நாள் முழுவதும் பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பணியாற்ற முடிவு செய்துள்ளேன் என அதில் தெரிவித்துள்ளாா் மூா்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.