சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 642-ஆக அதிகரித்தது.

Updated On :17 ஜனவரி 2021, 1:46 am

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 642-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து புதுவை மாநில சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் சனிக்கிழமை கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 8, மாஹேயில் 8 என மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காரைக்கால், ஏனாமில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 38,611-ஆக உயா்ந்தது.

தற்போது 286 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து 37,683 போ் (97.60 சதவீதம்) மீண்டனா்.

புதுவை மாநிலத்தில் 5,32,468 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,89,402 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி தவளக்குப்பம் புதுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 60 வயதானவா், மாஹேயைச் சோ்ந்த 69 வயது மூதாட்டி என மேலும் 2 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 642-ஆக (இறப்பு விகிதம் 1.66 சதவீதம்) உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.