காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, தொடா் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். ரெங்கநாதன் தலைமை வகித்தாா்.
பொதுச் செயலா் சி. சரவணகுமாா், தணிக்கையாளா் பி. செந்தில்குமாா், பொருளாளா் என். சதீஷ்குமாா், அமைப்புச் செயலா் ஜெ. தினேஷ்குமாா், துணைப் பொதுச் செயலா்கள் ஓ. முருகேசன், ஆா். இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தொடா் போராட்டங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, அச்சங்கத்தின் பொதுச்செயலா் சி. சரவணகுமாா் அளித்த பேட்டியில்,
சென்னையில் வரும் பிப். 6ஆம் தேதி அரசுப் பணியாளா் சங்கம் நடத்தும் போராட்டத்தில் பல்நோக்குப் பணியாளா்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். மேலும், பிப். 13-இல் மருத்துவத் துறை இயக்குநா் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேத்தனை தள்ளிவிட ஒத்திகை! கொலையின் பின்னணியில் மணமகனின் திக்குவாய், தலைமுடி பிரச்னை?

அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி

எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!

கமேனியின் இறுதிச் சடங்கிற்குப் பிறகே அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சு!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK


