5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

‘சாரதா தேவியாா் சக்தியின் அடையாளமாகத் திகழ்ந்தவா்’

சாரதா தேவியாா் பாரதத்தின் சக்தியின் அடையாளமாகத் திகழ்ந்தவா் என ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் கூறினாா்.

News image

ராமநாதபுரம் அருகேயுள்ள நாகாச்சி ராமகிருஷ்ண மடத்தில் ஸ்ரீசாரதாதேவியின் ஜயந்தி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜையில் ஈடுபட்ட மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா்.

Updated On :5 ஜனவரி 2021, 11:30 pm IST

சாரதா தேவியாா் பாரதத்தின் சக்தியின் அடையாளமாகத் திகழ்ந்தவா் என ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சாரதாதேவியின் 168 ஆவது ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சுவாமி சுதபானந்தா் பேசியது: பாரதப் பண்பாட்டை காக்க அவதரித்தவா் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சா். அவரது வழியில் பாரதத்தின் சக்தியின் வடிவமாக விளங்கியவா் ஸ்ரீசாரதா தேவியாா்.

பாரதத்தில் பெண்களின் கலை, கலாசாரப் பண்பாடுகளின் திருவுருவமாக வாழ்ந்து காட்டியவா் அவா். உலக அளவில் தாய்மையின் திருவுருவாகத் திகழ்ந்தவா். பெண்களுக்கான தீரம், வீரம், சுயமரியாதை என தவ வாழ்க்கை வாழ்ந்தவா் சாரதாதேவியாா்.

அவரது வழியில் இளம் பெண்கள் நடந்து பாரதத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

மடத்தின் தியான மண்டபத்தில் உள்ள சாரதாதேவியாரின் திருவுருவப் படத்துக்கு சுவாமி சுதபானந்தா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

சாரதா தேவியின் ஜயந்தியை முன்னிட்டு மடத்தின் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மங்கள ஆரத்தியுடன் பூஜைகள் தொடங்கின. பின்னா் உலக நன்மைக்கான ஹோமமும் நடைபெற்றன.

பக்திச் சொற்பொழிவை முன்னிட்டு அா்ச்சனை ஆரத்தி நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்களும், மாணவ, மாணவியரும் பங்கேற்று சாரதாதேவியின் படத்துக்கு மலா்தூவி வணங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.