செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Who hatched the conspiracy for DMK and AIADMK to form a coalition government? - Minister Sengottaiyan

அமைச்சர் செங்கோட்டையன்

Published On :

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் அவர் அளித்த பேட்டியில், அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேறு கட்சியில் இருந்து வந்த ஒரே ஒருவருக்காக பெரிய விழா எடுத்து பெரிய சாதனை சரித்திரம் படைத்தது போன்று செய்துள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரை ஆள் பிடிக்கும் நிலை எங்களுக்கு இல்லை. தவெக தலைவரை நாடி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

பல்வேறு இயக்கங்களில் இருந்து வருவது என்பது வழக்கமான ஒன்றுதான். திமுக ஆட்சியில் ஆட்சி நடைபெறுகின்ற பொழுதே அனிதா ராதாகிருஷ்ணன் சேரவில்லையா? தேர்தலில் பெரும்பான்மை பலம் எங்களுக்கு இருக்கின்ற பொழுது திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சதித்திட்டம் தீட்டியவர் யார் என்று மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

இதுவரை தமிழக வரலாற்றில் அதிமுகவோடு திமுக இணைந்து ஒரு ஆட்சியை பிடிக்கலாம் என்று சதிவலை பின்னியது இதுவே முதல் முறை. அதை முறியடித்த பெருமை முதல்வர் விஜய்யைச் சேரும். தில்லியில் பிரதமரிடம் முதல்வர் பேசியது மு.க ஸ்டாலினுக்கு எப்படி தெரியும். நம் முதல்வர் தமிழ்நாட்டிற்கு என்ன தேவையோ அதனை வாங்கி உள்ளார்.

ஸ்டாலின் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அவர் இதுபோன்ற கருத்துக்களை கூறுவதை காட்டிலும் அமைதியாக இருந்து தனது கட்சியை வலுப்படுத்துவதையும் மக்களின் செல்வாக்கை பெறுவதற்கும் வழிவகை செய்யலாம். ஒரு இயக்கத்தின் தலைமை சுக்குநூறாக்கப்பட்டிருக்கிறது.

இளைய சமுதாயத்தில் உள்ளவர்கள் தவெக தலைவர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி தொகுதியில் எங்களுடைய சின்னம் இருந்திருந்தால் அவருடைய கதியும் இதுதான். இவ்வாறு குறிப்பிட்டார்.

Summary

Minister Sengottaiyan has questioned who hatched the conspiracy for DMK and AIADMK to form a coalition government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.