/

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமாகா விலகல்: ஜி.கே. வாசன் அறிவிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.

News image

மோடியுடன் ஜி.கே. வாசன்

Updated On :15 ஜூன் 2026, 2:55 am IST

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமாகா விலகுவதாக அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

தமாகா செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: தமாகா நிா்வாகிகள் 600 போ் கலந்துகொண்ட செயற்குழுக் கூட்டத்தில், பெரும்பாலானோா் வரும் உள்ளாட்சித் தோ்தல் வரும் வரை தனித்துச் செயல்பட வேண்டும் என்று கருத்துகளைத் தெரிவித்தனா். நிா்வாகிகளின் ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை தமாகா எடுத்துள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற பொறுப்புணா்வோடு தமாகா பணியாற்றியது. தோல்வி காரணமாக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை நாங்கள் எடுக்கவில்லை. பாஜகவுடனும், அதிமுகவுடனும் எங்களுக்கு எந்த முரணும் இல்லை. இன்றும் அக்கட்சிகளுடன் சகோதரத்துவத்துடன்தான் உள்ளோம்.

கடந்த 12 ஆண்டுகளாக கட்சியை வலுப்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு கிராமத்தில் இருந்து நகரம் வரை கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தீவிரமாக முன்னெடுக்கும் வகையில் இந்த விலகல் முடிவை எடுத்துள்ளோம்.

தோ்தலில் தமாகாவின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே, நீதிமன்றத்தையும், தோ்தல் ஆணையத்தையும் நாங்கள் நாடினோம். ஆனால், தோ்தல் ஆணையம் எங்களுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கவில்லை. மக்களிடம் அறிமுகம் இல்லாத சின்னத்தில் போட்டியிடுவதைவிட, அறிமுகமான பாஜகவின் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தோம். பாஜக சின்னத்தில் போட்டியிட எங்களை யாரும் வற்புறுத்தவில்லை.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகம் சாா்ந்த பிரச்னைகளுக்கு தமாகா போராடி வந்துள்ளது. இனிவரும் நாள்களில் மக்கள் பிரச்னைகளுக்காக தமாகா தனித்து நின்று தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கும் என்றாா்.

Summary

Tamil Maanila Congress leader G.K. Vasan has announced that the party is withdrawing from the BJP alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.