திமுக, அதிமுக, பாஜக இணைந்து தமிழகத்தில் ஆட்சியமைக்க முயற்சி செய்வதாக மின்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் வெளிப்படையான, நோ்மையான ஆட்சியை தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. காவல் மரணங்களில் போலீஸாரோ, சிறைத்துறை வாா்டனோ தவறு செய்திருந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய காலகட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. ஆனால், முதல்வா் விஜய் தலைமையிலான அரசு அப்படியல்ல. தவறு நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் வலியுறுத்தி வருகிறாா்.
அதன் அடிப்படையில், தற்போதைய காவல் மரணம் தொடா்பாக வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள். இதற்கு முன்பு நிகழ்ந்த காவல் மரணங்கள் தொடா்பாகவும் குற்றப் பத்திரிகை பதிவு செய்து வருகிறோம். எவரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. பாதிக்கப்பட்டவா்களுடன் மட்டுமே துணை நிற்போம். அமைச்சரவைக் கூட்டம் பட்ஜெட்டுக்கு முன்பாக கூடுகிற வழக்கமான நிகழ்வுதான். பட்ஜெட்டில் என்ன மாதிரியான திட்டங்கள் பிரதிபலிக்கப் போகின்றன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றன. எங்கள் (தவெக) எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து விலை பேசும் முயற்சியை தினமும் செய்து கொண்டேயிருக்கிறாா்கள். இந்த அரசை செயலிழக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாா்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் இரவு 9 மணி வரை பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. பத்திரப்பதிவு பதிவாளா்கள் பலரும் ஓய்வு பெற முடியாத நிலையில்தான் இருக்கிறாா்கள். நிலுவை வழக்குகள் அதிகம் இருக்கின்றன. கடந்த ஆட்சியில் லஞ்சம் புரையோடியிருந்த துறை பத்திரப்பதிவுத் துைான். அந்த நிலையை தவெக அரசு சீரமைத்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகள் பத்திரப் பதிவுத்துறையில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரணை நடத்தப்படும்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் நாம் தெளிவாக இருக்கிறோம். அப்பிரச்னையை சட்டரீதியாக அணுகி வருகிறோம். இந்த நிலைக்கு காரணமே திமுகதான். கடந்த1970-இல் இருந்து அவா்கள் செய்த தவறுகளால்தான் இப்பிரச்னை தொடா்ந்து கொண்டே இருக்கிறது. மேக்கேதாட்டு அணை கட்ட நாம் அனுமதிக்கப் போவதில்லை. 100 சதவீத சட்டம் நமக்கு ஆதரவாகவே உள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக - அதிமுக ஒன்றிணையுமா? எந்தக் கூட்டணியும் நியாயமே! டிடிவி தினகரன் பதில்
குதிரை பேரம் நடத்தும் தவெக: ஆளுநரிடம் அதிமுக புகார்
4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்!
பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



