திமுக - அதிமுக குறித்த கேள்விக்கு அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் சேர்க்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் பேசியதாவது, "பாஜகவை எதிர்ப்பதற்காக தவெகவும் திமுகவும் ஒரே அணியில் வர வேண்டும் என திருமாவாளவன் கூறியிருப்பதை அரசியல் கருத்தாகவே நான் பார்க்கிறேன்.
அதேபோல, திமுகவும் அதிமுகவும் ஒன்றிணையுமா என்ற கேள்வி எழுப்புகிறீர்கள். ஆனால், அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்றுசேர்க்கும்.
இதனை நாம் கடந்த காலங்களிலும் பார்த்துள்ளோம். அண்ணாவும் ராஜாஜியும் ஒன்று சேர்ந்ததுபோல பல முன்னுதாரணங்கள் உள்ளன.
திமுக கூட்டணியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுத்து அமைச்சரவையில் இடமளித்து, தவெக கூட்டணியில் வைத்துக்கொள்வது நியாயமெனில், எந்தக் கூட்டணியும் நியாயம்தான்.
இந்தத் தேர்தலில் விஜய் 35 சதவிகிதம் வாக்குகள் வாங்கியுள்ளார். 108 இடங்களை வென்றதால் அவர் பலம் பொருந்திய கட்சி என்று நீங்கள் பார்த்தால், அதனை வீழ்த்துவதற்கான வியூகத்தை வருங்காலத்தில் மற்ற கட்சிகள் எடுப்பதில் தவறேதுமில்லையே" என்று தெரிவித்துள்ளார்.
Summary
Will DMK and AIADMK unite? TTV Dhinakaran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி: டிடிவி தினகரன் விமர்சனம்!
திமுகவின் முதுகில் குத்திய வைகோ: டிடிவி தினகரன்

நெருக்கமானவர்களுக்கு அரசு உயர் பதவி: வெங்கட நாராயணா விவகாரத்தில் டிடிவி தினகரன் கண்டனம்






