அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்

பாஜகவை எதிர்க்கும் தவெகவும் திமுகவும் ஒரே அணியில் வரவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியது பற்றி...

News image

தொல். திருமாவளவன் - கோப்புப்படம்

Updated On :11 ஜூலை 2026, 9:25 am IST

பாஜகவை எதிர்க்கும் தவெகவும் திமுகவும் ஒரே அணியில் வரவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விசிக மண்டல செயற்குழுக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது, "நான் எங்கே சென்றாலும், தமிழ்நாட்டில் பாஜக வலிமை பெற்றுவிடக் கூடாது என்றும், ஆர்எஸ்எஸ் காலூன்றி விடக் கூடாது என்பதுதான் என்னுடைய கவலை.

திமுக தோற்றுப் போனது ஒரு கவலை. அதனைவிட, நம் கண் முன்னேயே அதிமுகவை இப்படிச் சிதறடிக்கிறார்களே என்ற கவலையும்கூட.

பாஜகவை கொள்கை எதிரி என தவெக கூறுகிறது. இவ்வளவு நாள்கள் எதிர்த்த திமுகவும் தொடர்ந்து எதிர்ப்பதாகக் கூறுகிறது. பாஜகவை எதிர்ப்பதுதான் அரசியல் என இந்தியா கூட்டணியும் சொல்கிறது. அப்படியெனில், ஏன் இவர்கள் அனைவரும் ஒரே அணிக்குள் வரக் கூடாது என்றுதான் நான் கேட்கிறேன்.

இதில் என்ன தவறு இருக்கிறது? கேரளத்தில் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் பயங்கரமான மோதல். பினராயி விஜயனை ஆர்எஸ்எஸ்-காரர் என்றே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சிக்கிறார். ஆனால், இந்தியா கூட்டணியில் காங்கிரஸும் உள்ளது, மார்க்சிஸ்ட்டும் உள்ளது.

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கும் காங்கிரஸுக்கும் மோதல். ஆனால், இந்தியா கூட்டணியில் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அரசியல் நடக்கக் கூடாதா? இதனை இந்த திருமாவளவன் சொன்னால் உங்களால் புரிந்துகொள்ள முடியாதா?" என்று தெரிவித்தார்.

Summary

Why shouldn't TVK and DMK come together in the same alliance? asks VCK Cheif Thol. Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.