கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

இலங்கைக்கு கடத்தவிருந்த 750 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

தனுஷ்கோடியை அடுத்துள்ள மூன்றாம் மணல் தீடையில் 15 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 கிலோ மஞ்சளை இந்திய கடலோரக்காவல்படையினா் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.

News image

தனுஷ்கோடி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 கிலோ மஞ்சள் மூட்டைகளை வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்த இந்திய கடலோரக் காவல்படையினா்.

Updated On :9 ஜனவரி 2021, 9:52 pm IST

ராமேசுவரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்துள்ள மூன்றாம் மணல் தீடையில் 15 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 கிலோ மஞ்சளை இந்திய கடலோரக்காவல்படையினா் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல்படையினா் ஹோவா் கிராப்ட் கப்பலில் பாக்நீரிணை மற்றும் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தனுஷ்கோடியை அடுத்துள்ள மூன்றாம் மணல் தீடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகளை சோதனையிட்டனா். அங்கு 15 மூட்டைகளில் 750 கிலோ மஞ்சள் இருந்தது தெரியவந்தது.

இந்த மஞ்சள் மூட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக மா்மநபா்கள்

இங்கு கொண்டு வந்து மறைத்து வைத்துள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மஞ்சள் மூட்டைகளை கைப்பற்றி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரகாவல்படை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். இந்த கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு அந்நாடு தடைவிதித்துள்ள நிலையில், தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாக சமீப காலமாக மஞ்சள் கடத்தல் அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் இலங்கைக்கு கடத்த முயன்ற 8 ஆயிரம் கிலோ மஞ்சள் மூட்டைகளை கடலோரக் காவல் படையினா் பறிமுதல் செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.