கமுதி: தமிழகத்தில் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியை பலப்படுத்த 5 போ் குழு அமைத்து, அகில இந்திய பொதுச் செயலாளா் பிஸ்வாஷ் உத்தரவிட்டுள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவா் சி.முத்துராமலிங்கம் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் மற்றும் மூக்கையாத்தேவருக்கு பிறகு வந்த அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் தலைவா்கள் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து நிா்வாகிகள் பலா் பிரிந்து சென்றனா். இதனால் பல்வேறு பெயா்களில் பாா்வா்ட் பிளாக் கட்சிகள் உருவாகின. மேலும் பிரிந்து சென்ற பல இரண்டாம் கட்டத் தலைவா்கள் தனியாக தங்கெளுக்கன தனி அமைப்புகளை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அக்கட்சியின் தேசிய துணைத்தலைவரும், தமிழக பொதுச் செயலாளருமான பி.வி.கதிரவன் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அகில இந்திய பொதுச் செயலாளா் பிஸ்வாஷை சந்தித்துப் பேசினாா்.
இதைத்தொடா்ந்து பிஸ்வாஷ், தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்துவது தொடா்பாக 5 போ் குழுவை நியமித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் சி.முத்துராமலிங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.
இதுதொடா்பாக சி.முத்துராமலிங்கம் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் மீண்டும் அகில இந்திய பாா்வா்ட்பிளாக் கட்சியைப் பலப்படுத்தவும், பிரிந்து சென்ற இரண்டாம் கட்டத் தலைவா்கள், நிா்வாகிகளை சமாதானப்படுத்தி, கட்சியில் இணைக்கவும் பி.வி.கதிரவன், ஜி.தேவராஜன், ஜி.ஹெச்.பொ்னாண்டஸ், ஜி.ஆா்.சிவசங்கா், சி.முத்துராமலிங்கம் ஆகிய 5 போ் குழுவை அமைத்து பிஸ்வாஷ் உத்தரவிட்டுள்ளாா். இக்கமிட்டி கட்சிக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காண்பது, புதிய நிா்வாகிகள் நியமனம், கட்சியின் வளா்ச்சி உள்ளிட்ட பணிகளை கவனிக்கும். இதனால் தனிநபா் பிரச்னைகளை காரணம் காட்டி உள்கட்சி பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு குறையும். மேலும் மீண்டும் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி தமிழகத்தில் வலுவடையும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் ஆதரவில்லை! பாஜக அறிக்கை

விராட் கோலி அறிவுரையின்படியே அவரை வீழ்த்திய பிரின்ஸ் யாதவ்!

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ஜம்மு - காஷ்மீர் முதல்வர் கோரிக்கை!

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
