சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

லால்பகதூா் சாஸ்திரி, கொடிகாத்த குமரன் நினைவு தினம் அனுசரிப்பு

பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரன் ஆகியோரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

News image
Updated On :12 ஜனவரி 2021, 5:49 am IST

பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரன் ஆகியோரது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் பொதுச்செயலாளா் எஸ்.ஐ.ஏ.ஹரீஸ் தலைமை வகித்தாா். மூத்த தலைவா் ஆா்.சண்முகசுந்தரம் இலக்கிய பேச்சாளா் என்.என்.நாகநாதன், ஆா்டிசிசி வங்கியின் முன்னாள் மேலாளா் வி.வேலு, ஏ.பி.மகாதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வுபெற்ற வேளாண் அலுவலா் மு.மணவாளன் லால்பகதூா் சாஸ்திரி, கொடிகாத்த குமரனின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.