திருமலை ஏழுமலையான் தரிசனம் ஏப்ரல் 9 ஆம் தேதி 6 மணி நேரம் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். பிரம்மோற்ஸவம், உகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவ தினங்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
இம்மாதம் 11ஆம் தேதி உகாதி பண்டிகை என்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) கோயிலை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்காக அன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அந்நாளில் ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


