/

ஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை தீர்த்தக்காவடி

பழனியில் திங்கள்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முருகபக்தர்கள்

News image
Updated On :7 ஏப்ரல் 2014, 1:07 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் ஸ்ரீஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கொடுமுடி தீர்த்தக்காவடி எடுத்து ஊர்வலம் சென்று மூலவரை வழிபட்டனர்.

பழனியில் திங்கள்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முருகபக்தர்கள் விரதமிருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமான வழிபட்டு வருகின்றனர்.  பழனி ஸ்ரீஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் தரித்து புறப்பாடு மேற்கொண்டனர்.  பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் முன் துவங்கிய இந்நிகழ்ச்சியைக்கு கந்தவிலாஸ் செல்வக்குமார் துவக்கி வைத்தார்.

பேரவை தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் தீர்த்தக்காவடியுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியே யானை, மேளதாளம் புடைசூழ ஊர்வலமாக திருஆவினன்குடி கோயில் சென்று பின் கிரிவீதி சுற்றி மலையேறினர்.  உச்சிக்காலத்தின் போது மூலவருக்கு கொடுமுடி தீர்த்தம் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனர்.  ஊர்வலத்தின் முன்னதாக லாரிகள் மூலம் சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.