ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தொல்லியல் துறை கல்வெட்டு நூலில் ஸ்ரீஆண்டாள் கோயில் கல்வெட்டு இடம் பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்ட கல்வெட்டுத் தொகுதி 1 மற்றும் 2-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலின் கல்வெட்டுகள் இடம்பெறவில்லை. அடுத்த தொகுதியில் தமிழக

News image
Updated On :23 ஆகஸ்ட் 2014, 1:39 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்ட கல்வெட்டுத் தொகுதி 1 மற்றும் 2-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலின் கல்வெட்டுகள் இடம்பெறவில்லை. அடுத்த தொகுதியில் தமிழக தொல்லியல் துறை இக் கல்வெட்டுகள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து மாமன்னர் திருமலை நாயக்கர்-வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாடு மற்றும் அறக்கட்டளை பாதுகாப்பு பேரவையின் நிறுவனத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வருக்கும், தொல்லியல் துறை ஆணையருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தமிழ்நாட்டில் 108 வைணவ திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை முற்கால சேர, சோழ, பாண்டியர்களாலும் பிற்கால மூவேந்தர்களாலும் கட்டப்பட்டது. அதற்குப் பின்னர் விஜயநகர மன்னர்களால் எல்லா கோவில்களும் புனரமைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது. இவர்கள் யாவரும் செய்த கோவில் திருப்பணிகள் முழுவதும் அந்தந்தக் கோவில்களின் சுவற்றில் கல்வெட்டுகளாகவும், செப்புத் தகட்டிலும் அவர்கள் செய்த தானங்களையும் குறித்து வைத்துள்ளார்கள். சில காலங்களில் ஓலைச் சுவடிகளிலும் எழுதி வைத்துள்ளார்கள்.

பெரும்பாலான வைணவக் கோவில்களில் கல்வெட்டுக் குறிப்புகள் தமிழக தொல்லியல் துறை மூலமாகப் புத்தகங்களாக அந்தந்த மாவட்டப் பெயரில் வெளிவந்துவிட்டன. ஆனால் வைணவக் கோவில்களில் மிகவும் சிறப்பு மிக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் (நாச்சியார்) திருக்கோவிலுக்கு விஜயநகரப் பேரரசுகளில் மிகவும் தலைசிறந்தவரான மாமன்னர் திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் அமுது படிக்கவும், நந்தா விளக்கு திருவிழா முதலான ஏராளமான திருப்பணிகள் மற்றும் அறக்கொடைகள், தேவதானம்-இறையிலிகள் செய்துள்ளனர். இவை யாவும் இக்கோவிலில் உள்வெளிப் பிரகாரச் சுவர்களில் அழியாத கல்வெட்டுகளாகவும், பல செப்புத் தகடுகளாகவும் செதுக்கி வைத்துள்ளனர்.

இவற்றை தமிழக தொல்லியல் ஆய்வு அலுவலர்கள் பல வருடங்களுக்கு முன்பே படி எடுத்துவிட்டார்கள். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலமாக விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 1 மற்றும் 2 வெளிவந்துள்ளன.


இதில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிறு சிறு ஊர்களில் உள்ள சாதாரணக் கோவில்களின் கல்வெட்டுக் குறிப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் மதுரைக்கு அடுத்த சிறப்பு மிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோவிலின் கல்வெட்டு குறிப்புகள் தமிழக தொல்லியல் துறையால் இன்றுவரை வெளியிடப்படவில்லை.
நாட்டில் உள்ள ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக தொல்லியல் துறை ஆண்டாள் கோவில் கல்வெட்டுகளை யாவரும் அறியச் செய்யும் வகையில் வெளியிட கோரியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.