திருமலை ஏழுமலையானின் சொத்துகள் முழுவதும், சீமாந்திராவுக்கே சொந்தம் என, அரசு உத்தரவு விட்டுள்ளது.
திருமலை ஏழுமலையான் குடிகொண்டுள்ளது சித்தூர் மாவட்டத்தில், அதனால், ஏழுமலையான் சீமாந்திராவை சேர்ந்தவர்.ஆனால், ஜூன் 2ம் தேதி முதல் ஆந்திர மாநிலம், அதிகார பூர்வமாக இரண்டாக பிரிய உள்ளது. இந்நிலையில், இரண்டு மாநிலத்திற்கும், ஆந்திராவில் உள்ள, அனைத்துத்துறைகள் சமமாக பிரிக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்தின் சொத்துக்கள் அனைத்தும், ஏழுமலையானை சேர்ந்தது. மேலும், ஆந்திரா ஒன்றாக இருந்த நிலையில், தேவஸ்தானத்தின் சொத்துகள் தெலுங்கானாவிலும், உள்ளது. அரசு சொத்துகளை மட்டும் தான், இரண்டு மாநிலங்களுக்கு பிரித்தளிக்க முடியும்.
இந்நிலையில், தேவஸ்தானம் ஒரு தனியார் நிறுவனம் மட்டுமல்லாமல், அதனுடைய சொத்துகள் அனைத்தும், பக்தர்கள் நன்கொடையாக வழங்கியவை. அதனால், இந்த சொத்துகள் அனைத்தும் தேவஸ்தானத்தை மட்டுமே சாரும். மேலும், திருமலை ஆந்திர மாநிலத்தில்(சீமாந்திரா) உள்ளதால், இதன் மீது முழு பொறுப்பும் ஆந்திர அரசிற்கு உண்டு. ஆனால், ஏழுமலையான் சொத்துகளை இரண்டு மாநிலங்களுக்கும் பிரிப்பது இயலாத காரியம் என்பதால், இதன் முழு உரிமையை சீமாந்திராவிடம், அரசு அளித்துள்ளது. இதற்கான உத்தரவு, வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதனால் தேவஸ்தானத்திடம் உள்ள சுமார் ரூ 2 லட்சம் கோடிக்கான சொத்து முழுவதும் சீமாந்திராவை சேர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


