அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் மகர்நோம்புதிருவிழா: பலத்த போலீஸ் பாதுகாப்பு

விருதுநகரில் மகர்நோம்பு திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சமுதாயத்தினர் ரெட்டை வால் புலிவேஷம் அணிந்து முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலம் வந்தனர்.

Updated On :3 அக்டோபர் 2014, 1:54 pm

விருதுநகரில் மகர்நோம்பு திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சமுதாயத்தினர் ரெட்டை வால் புலிவேஷம் அணிந்து முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலம் வந்தனர்.

    விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதேபோல், இந்த விழாவை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் இருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மதுரை சாலையின் மீது மண்டபம் முன்பு ஒவ்வொரு சமுதாயத்தினரும் மண்டகப்படி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீசொக்கநாதர் அம்பு விட்டு அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

     இதில், ஸ்ரீசொக்கநாதரை வரவேற்கவும், எதிர்சேவை அளிக்கும் வகையிலும் ஒவ்வொரு சமுதாயத்தினரும் ரெட்டைவால் புலிவேஷம் போட்டு வரவேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் விருதுநகரைச் சேர்ந்த ஒவ்வொரு சமுதாயத்தினரும் அவரவர்களுக்கு காவல் துறையினரால் ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்திற்குள் ரெட்டைவால் புலிவேஷத்துடன் மதுரை சாலை, பழைய பஸ்நிலையம், தேசபந்து மைதானம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து ஊர்வலத்தை முடித்துக் கொள்வார்கள். அதேபோல், ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வீதிகள் வழியாக புலிவேஷத்துடன் சிலம்பம் ஆடிக்கொண்டு வந்து ஸ்ரீசொக்கநாதர்சுவாமியை வழிபாடு செய்து விட்டுச் சென்றனர்.

     இந்த மகர்நோன்பு விழாவில் ஒவ்வொரு சமுதாயத்தினரும் ரெட்டைவால் புலிவேஷம் போட்டு வருவர். இதுபோன்று வருவதால் ஏற்படும் அசம்பாவிதம் மற்றும் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதை தவிர்க்கும் வகையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி முன்னிலையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் உள்ளி 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பஜார், கச்சேரி சாலை, சிவகாசி சாலை, ஸ்ரீசொக்கநாதர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.