ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் தெப்போத்சவம்
ஸ்ரீய:பதியான வைகுண்ட வாஸுதேவன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் விசேஷமானது


திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலத்தில் உள்ள ஸ்ரீ பிரஸன்ன வேங்க்டாசலபதி பெருமாள் திருக்கோயிலில் சித்திரை 21-ம் நாளில் (4-5-15) தெப்போத்சவம் நடைபெறுகிறது.
ஸ்ரீய:பதியான வைகுண்ட வாஸுதேவன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் விசேஷமானது குணசீல க்ஷேத்திரம். குணசீல மஹரிஷியின் தவத்திற்கு இணங்கி திருவேங்கடமுடையான் இத்திருத்தலத்தில் கையினில் செங்கோல் ஏற்றி நின்ற திருக்கோலத்தில் ஸேவை சாதிக்கின்றார்.
தன்னை அண்டிவரும் பக்தர்களுக்கு வேண்டுவன எல்லாம் நல்கி சித்தப்பிரமை நீக்கி மனநலம் காத்து அருள்பொழியும் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசப் பெருமாளுக்கு "ஆதிமூலமே" என்று அழைத்த கஜராஜனுக்கு அபயம் அளித்து மோக்ஷப் பதவியை அருளிய ஸ்ரீமத் நாராயணனைப் போற்றும் வகையில் பிரதி வருடம் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் "தெப்போத்சவம்" வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அவ்வாறே நிகழும் ஸ்ரீ மன்மத வருடம், சித்திரை மாதம் 21-ம் தேதி (04-05-15) திங்கட்கிழமை பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீபிரஸன்ன வேங்கடேசப் பெருமானுக்கு பாபவினாஸ தீர்த்தத் திருக்குளத்தில் தெப்போத்சவம் விசேஷமாக நடைபெற உள்ளது. பக்த கோடிகள் அனைவரும் வருகைதந்து குணசீலப் பெருமானின் பேரருளுக்கு பாத்திரராகக் கோரி அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்:
04-5-2015 திங்கட் கிழமை
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மூலவர் முத்தங்கி ஸேவை
இரவு 7 மணிக்கு ஸ்ரீ பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி ஸகஸ்ர தீபாலங்கார ஸேவை
இரவு 8 மணிக்கு ஸ்ரீ பெருமாள் தாயாருடன் தெப்பத்தில் எழுந்தருளல்
இரவு 10 மணிக்கு கண்ணாடி அறை ஸேவை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...