நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சென்னையில் ஸ்ரீஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் ஆராதனை விழா

ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியின் மறு அவதாரமாகக் கருதப்படுபவர் ஸ்ரீஸமந்த ராமதாஸர். "ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெயராம" என்ற தாரக மந்திரத்தையும், காயத்ரீ மந்திரத்தையும் கோடிக்கணக்கில் ஜபம் செய்து ஸ்ரீராமபிரானின்

News image
Updated On :13 பிப்ரவரி 2015, 10:45 am

எஸ். வெட்கட்ராமன்

ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியின் மறு அவதாரமாகக் கருதப்படுபவர் ஸ்ரீஸமந்த ராமதாஸர். "ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெயராம" என்ற தாரக மந்திரத்தையும், காயத்ரீ மந்திரத்தையும் கோடிக்கணக்கில் ஜபம் செய்து ஸ்ரீராமபிரானின் தரிசனத்தை பல முறை பெற்ற மகான். அவர் பிறந்ததும் ஒரு ராமபிரானுக்குரிய நவமி தினம், மகாசமாதி அடைந்ததும் ஒரு நவமி தினமாகும். நாராயணன் என்ற பூர்வாஸ்ரம பெயருடைய அவர், "நான் ராமனது தாஸன், அவனது வார்த்தைகளை பின்பற்றுவதுடன் அவனது வழியினையும் பின்பற்ற வேண்டும்" என்று சதா சர்வகாலமும் ஸ்ரீராமனையே நினைத்து வாழ்ந்து வந்த அவர் பிற்காலத்தில் ராமதாஸர் என அழைக்கப்பட்டார்.

இல்லற வாழ்க்கையை அவர் விரும்பவில்லை. மகாராஷ்டிர மன்னர் சத்ரபதி சிவாஜியின் குருவாகத் திகழ்ந்தார். மராட்டிய மொழியில் ஸமர்த்தர் இயற்றிய நூல்கள் பல. இறுதியாக மகாராஷ்டிர மாநிலத்தில் ஸஜ்ஜன் காட்டில் 1681ஆம் ஆண்டு மாகமாசம் கிருஷ்ணபக்ஷ நவமியன்று ராமதாஸர் ராமனது திருவடியில் கலந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அவரது மறைவு தினம் "தாஸநவமி" என அவரது பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் 1934ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் வசித்து வந்த கன்னையா பந்துலு ராமதாஸி என்ற தெலுங்கு அந்தணர் ஸ்ரீஸமர்த்த ராமதாஸரின் போதனைகள், வாழ்க்கை முறைகளில் ஈர்க்கப்பட்டு அவரது ஆராதனை விழாவை பிரதி வருடம் நடத்த ஸ்ரீராம் ஸமர்த்தப்ரேம மண்டலியை துவக்கினார்.

தொடர்ந்து 81வது வருடமாக அவரது புதல்வர் ஸ்ரீ ராமதாஸ் அவர்களால் இந்த விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

1959ஆம் வருடம் நடந்த 25வது வருட ஆராதனை விழாவில் காஞ்சி மகாசுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கியது நினைவு கூரத்தக்கது.

ஸ்ரீஸமர்த்த ராமதாஸ் சுவாமிகளின் 333வது ஆராதனை உற்சவம் கொளத்தூர் (சென்னை-99) ஸ்ரீனிவாச நகரில் உள்ள செல்வா ராஜேஸ்வரி மண்டபத்தில் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தினசரி உற்சவ விருத்தி பஜனை, ராம சங்கீர்த்தனம், மராட்டிய அபங்க பஜனைகள், உபன்யாஸங்கள், பாகவதோத்தமர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

Story image

இன்று பிப்ரவரி 13ம் தேதி தாஸரின் ஆராதனை நாள்.

இதனையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகள் : -

காலை 5.30 மணி - அகண்ட ராமநாம ஜபம்

           6.30 மணி - மகா பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, வேதபாராயணம்

           9.00 மணி - கோ பூஜை

           10.30 மணி - பக்தி தார மண்டலியினரின் மராத்தி பஜனை

மதியம் 12.00 மணி - ஆராதனை (மகாசமாதி சந்தேஷ்)

             1.00 மணி - ஆர்த்தி, அன்னதானம்

மாலை 6.30 மணி - ஸ்ரீ ராமதாஸரின் அபங்க கீர்த்தனைகள்

                               மும்பை ஸ்ரீ கணேஷ்குமார் குழுவினர் பங்கேற்கின்றனர்.

இரவு  9.00 மணி - ஸ்ரீ ஆஞ்சநேய உத்ஸவம்

ஆராதனை நடக்கும் செல்வா ராஜேஸ்வரி மண்டபத்துக்கு வில்லிவாக்கம் ரயில்வே நிலையத்தில் இருந்து செல்லலாம்.

மேலும் தகவல்களுக்கு,

சி. ராமதாஸ்,

செல்பேசி எண் - 9884214115-ஐ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.