/

மாலைக்கிழவி அம்மனுக்கு ஆகஸ்ட் 14ல் பெருந்திருவிழா

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மடத்துப்பட்டி தெருவில் கோயில் கொண்டு அருள் பாலிக்கும் அன்னையின்....

News image
Updated On :23 ஜூலை 2015, 10:43 am

எஸ். வெட்கட்ராமன்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மடத்துப்பட்டி தெருவில் கோயில் கொண்டு அருள் பாலிக்கும் அன்னையின் திருநாமம் ஸ்ரீ மாலைக்கிழவி அம்மன் சக்தி வாய்ந்தவள். சிறுமியின் தோற்றத்தில் சிரித்த முகத்துடன் காட்சியளிப்பாள். இந்த ஆலயம் மிகப் பழமையானது. இவ்வாலயம் 42 ஊர் துளுவ வேளாளர் உறவின் முறையாளர்களுக்கு பாத்தியப்பட்டது. வேண்டுவோருக்கு வேண்டியதை தந்து அருள்பாலிக்கும் இந்த அம்மன்  மாங்கல்ய பாக்கியத்தை  தந்து அருள் பாலிக்கிறாள் என்பது இதன் தனிச்சிறப்பு.

சிவபெருமான் நேரில் தோன்றி அன்னையே இவ்விடத்தில் கோயில் கொண்டு அனைத்து மக்களையும் காத்தருள்வாய் என ஆசீர்வாதித்த அம்மன். சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து அன்னையை தரிசனம் செய்து செல்வார்கள். உலகளாவிய தாய் அன்னை பராசக்தியின் சொரூபமாக இந்த அன்னை விளங்குகிறாள். சிவபெருமானின் இளைய பிள்ளையான முருகன், குமரன்(இளைஞன்) என்று சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பெருமானுக்கு குறிஞ்சி கிழவன், தமிழ் கிழவன் என்று பெயர்கள் உண்டு.

கிழவன் என்றால் தலைவன் உரிமைகொண்டவன் என்று பொருள். கிழவி என்றால் உலகறிந்தவள், நிகரற்றவள் என்று பொருள் இது சிவன் வாக்கு. இந்த ஆலயத்தில் ஞாயிறு தோறும் அம்மனுக்கு  அபிஷேகம் அலங்காரம் பூஜை நடைபெறுகிறது. அச்சமயம் அனைவரும் ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்து பலன் பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளி அன்று அம்மனுக்கு பெருந்திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆங்கில வருடம் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி முதல் மேளதாளத்துடன்  பால்குடம் எடுத்து வருதல், பொங்கலிடுதல், முடி இறக்குதல் பின் அம்மனுக்கு நீராட்டு அபிஷேகங்கள் என அமர்களமாக  விழா நடைபெறும். நாமும் அன்னை ஸ்ரீ மாலைக்கிழவி அம்மன் ஆலயம் சென்று அன்னையின் அருள் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.