/

அரக்கோணம் ஸ்ரீசாணாத்தியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீசாணாத்தியம்மன் கோயிலில் புணருத்தாரண மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 மார்ச் 2015, 6:57 am

எஸ்.சபேஷ்

அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீசாணாத்தியம்மன் கோயிலில் புணருத்தாரண மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திரளான மக்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.

அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ளது ஸ்ரீசாணாத்தியம்மன் கோயில். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இக்கோயிலில் மஹாகும்பாபிஷேகம் கடந்த 2002 ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று மஹாகும்பாபிஷேக பணிகள் புதன்கிழமை துவங்கின. தொடர்ந்து வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் கோயிலில் ராஜகோபுரத்திற்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி மஹாகும்பாபிஷேகத்தை நிறைவேற்றினர்.

விழாவில் நகரமன்ற தலைவர் சை.கண்ணதாசன், நகர முக்கிய பிரமுகர்கள் வி.எல்.ஜோதி, சியாம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயிலில் திருப்பணிக்குழு தலைவரும் ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழும தலைவருமான டி.ஆர்.சுப்பிரமணியம், கல்விக்குழும செயலர் டி.எஸ்.ரவிக்குமார், திருப்பணிக்குழு நிர்வாகிகள் நகரமன்றஉறுப்பினர் ஐயப்பன், விக்கிரமன், ராஜேந்திரன், மணி, முரளி உள்ளிட்ட சுவால்பேட்டை பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.