அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் கிருஷ்ணன் கோயிலில் வருண ஜப ஹோமம்
சென்னை அம்பத்தூர் OT பேருந்து நிலையம் வெகு அருகில் கிருஷ்ணாபுரம் பகுதியில் நயினி அம்மாள் தெருவில் உள்ளது அருள்மிகு குருவாயூர் கிருஷ்ணன் மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம்.


சென்னை அம்பத்தூர் OT பேருந்து நிலையம் வெகு அருகில் கிருஷ்ணாபுரம் பகுதியில் நயினி அம்மாள் தெருவில் உள்ளது அருள்மிகு குருவாயூர் கிருஷ்ணன் மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம்.
1980 செப்டம்பர் மாதம் அருள்மொழி அரசு திரு முருககிருபானந்த வாரியார் சுவாமிகளைத் தலைவராகக் கொண்டு செயல்பட்டு வந்த திருப்பணிக்குழு இந்தக் கோயிலை நிர்மாணித்து குடமுழுக்கு நடத்தி பொதுமக்கள் வழிபாட்டிற்கு அர்பணித்தது.
கடந்த பிப்ரவரி 2015-ல் நூதனமாக மூன்றுநிலை ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டு மூன்றாவது குடமுழுக்கு வைபவத்தை சிறப்பாக நடந்தேறியது. இவ்வாலயத்தில் முன்புறம் ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ
குருவாயூரப்பன், பாலமுருகன் சந்நதிகளும், பின்புறம் கஜப்பிரஷ்ட அமைப்புடன் கூடிய கருவறையில் ஸ்ரீ காசிவிஸ்வநாதரும், தனிச்சந்நதியில் விசாலாட்சி அம்மனும் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். இதைத்தவிர கோஷ்ட தெய்வங்களும், தேவி மார்களுடன் நவக்கிரகங்களும், ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானும், விஷ்ணுதுர்கையும், சர்வமங்கள சனீஸ்வரபகவானும், நூதன பைரவரும் சந்நதிகள் கொண்டு ஆலயத்திற்கு அழகு சேர்ப்பதுடன் வரும் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி கொண்டிருக்கிறார்கள். இவ்வாலயத்தில் ஒரு சிவ விஷ்ணு ஆலயங்களுக்கு உரிய அனைத்து உற்சவாதி தினங்களும், சம்வத்ஸ்த்ரா அபிஷேகங்களும் சிறப்புற நடைபெறுகின்றன. குருவாயூரப்பன் சந்நதியில் ஏகாதசி, திருவோண தினங்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் துலாபாரம் செலுத்தும் பிரார்த்னையும் நடைபெறுகின்றது. ஆண்டுதோறும் புரட்டாசி தசமியன்று குருவாயூரப்பன் உற்சவமூர்த்தி குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதியுலாவாக அருகில் உள்ள பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்பு எய்தும் விழா வேறு எங்கும் காணப்பெறாத ஒன்றாகும்.
அம்பத்தூர் கம்பன் கழகம் நிறுவனர் அருணாசலத்தை டிரஸ்டியாகக் கொண்டு குருவாயூர் கிருஷ்ணன் காசி விஸ்வநாதன் அறக்கட்டளை என்ற அமைப்பு ஆலய நிர்வாகங்களை திறம்பட செய்து வருகின்றது. உலக நன்மையை முன்னிட்டு இவ்வாலயத்தில் வேதவிற்பன்னர்களைக் கொண்டு செப்டம்பர் 9-ம் தேதி பெரிய அளவில்வருணஜப ஹோமம் நடைபெறுகின்றத. பக்தர்கள் அனைவரும் வந்து பங்கேற்லாம்.
தொடர்புக்கு: 9283122074
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...