விநாயகருக்கு விவாஹம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள மெலட்டூர் கிராமம் பாகவதமேள நாட்டிய நாடகங்கள் நடைபெறுவதில்


தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள மெலட்டூர் கிராமம் பாகவதமேள நாட்டிய நாடகங்கள் நடைபெறுவதில் பிரசித்தி பெற்ற ஊர் இங்குள்ள பழமையான ஸ்ரீ சித்திபுத்தி சமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் ஆலயம் ஸ்ரீ ஞானபுராணத்தில் ஸ்ரீ கர்க மஹரிஷியால் வர்ணிக்கப்பட்டிருக்கின்ற 108 கணபதி தலங்களுள் 81வது தலமாகும்.
இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம் செப்டம்பர் 7-ம் தொடங்கி 17 வரை நடைபெறுகின்றது. இதில் 7-வது நாள் உத்சவம் முக்கியமானது. அன்று விநாயகப் பெருமானுக்கு சித்தி, புத்தி தேவியர்களுடன் திருக்கல்யாண உத்சவம் முறைப்படி நடத்தி வைக்கப்படுகிறது.
இந்த வைபவம் இந்த ஊரில் மட்டுமே விசேஷமாக நடைபெறுகின்றது. திருமணம் தாமதமாகும் பெண்கள் இதில் பங்கேற்று பலன் பெறுவது கண்கூடு. இவ்வருடம் செப்.,14ம் தேதி காலை 9 மணிக்கு இந்த கல்யான உத்சவத்தை கண்டு களிக்கலாம்.
பங்கேற்க விரும்பும் அன்பர்கள் கலைமாமணி எஸ்.குமார் தொலைபேசி 9994367113, 09844096444 ஐ தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...