கேரளாவில் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழும் சைவ முதலை!
முதலைகள் தனது இரைக்காக விலங்குகளையும், மனிதர்களையும் வேட்டையாடி உண்ணும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்....


முதலைகள் தனது இரைக்காக விலங்குகளையும், மனிதர்களையும் வேட்டையாடி உண்ணும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.... ஆனால், இங்குள்ள கோயிலில் உள்ள ஒரு முதலை பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்கின்றதாம்!
கேரள மாநிலம், காசர்கோட்டில் உள்ள திருவனந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற அனந்த பத்மநாம ஸ்வாமி திருக்கோயில். இங்குள்ள ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள கோயில் அருகே வசிக்கும் முதலை ஒன்று அங்குள்ள பக்தர்கள் வழங்கும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகின்றதாம். அந்த முதலையின் பெயர் பாபியா.

ஏரிக்கோயில் என்று அழைக்கப்படும் இந்தக் கோயில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்து மூலவரான அனந்தபத்மநாம ஸ்வாமி அமர்ந்தபடி காட்சியளிக்கின்றார். மரத்தால் கட்டப்பட்ட இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோயில் ஏரியில் எப்போதும் ஒரு முதலை இருந்துகொண்டே இருக்குமாம். பெருமாளின் பிரசாதத்தை மட்டுமே சாப்பிடும் இந்த முதலை மிகவும் சாதுவானதாம். ஏரியில் இருக்கும் மீன்களைக் கூட இந்த முதலை சாப்பிடாதாம். வயோதிகம் காரணமாக இங்குள்ள முதலை இறந்துவிட்டாலும், எப்படியோ மறுபடியும் ஒரு முதலை தானாக வந்துவிடுமாம்.

சில நாட்களுக்கு முன்னர் வில்வமங்களம் என்ற ஒரு துறவி வாழ்ந்துவந்தார். அவருக்குக் கண்ணன் பாலகனாகத் தோன்றி சேவைப் புரிந்து வந்தார். ஒருகட்டத்துக்கு மேல் கண்ணனின் குறும்புத்தனம் தாங்க முடியாமல் வில்வமங்கள ஸ்வாமி கண்ணனை கண்டித்துள்ளார். இதனால், கண்ணன் இங்குள்ள குகை வழியாகச் சென்று மாயமாக மறைந்துள்ளார் கண்ணன். அனந்தபுரம் ஏரி கோயிலில் உள்ள அந்தக் குகையானது துறவியின் பெயரால் வில்வமங்களம் குகை என்றே அழைக்கப்படுகிறது.

இப்படிப் பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டுள்ள அனந்தபத்மநாத ஸ்வாமி கோயிலில் உள்ள முதலை பூஜையின் போது மணியோசை சத்தம் கேட்டதும் கோயிலுக்கு அருகில் வந்துவிடுமாம். கோயில் பூசாரி மற்றும் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதத்தை உண்கிறதாம்.
முதலைக்கு ஒருநாளைக்கு இரண்டு முறை உணவு வழங்கப்படுகிறது. பக்தர்கள் பணம் செலுத்தி உருண்டைகளை வாங்கித் தங்கள் கையால் நைவேத்யம் செய்யலாம். ஆனால் ஒன்று இந்த முதலை சைவ உணவுகளை மட்டும் தான் உண்ணுமாம். அசைவ உணவைச் சாப்பிடுவதில்லை என்பது தான் ஆச்சர்யம். கோயிலில் கொடுக்கும் உணவு முதலைக்கு போதுமானதாக இருக்குமா என்பது தான் புரியாத புதிர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...