அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

எந்த நட்சத்திரக்காரர்கள் எத்தனை முகம் ருத்திராட்சத்தை அணிய வேண்டும்?

ருத்திராட்சம் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகும். ருத்திராட்சத்தில் ஒரு முகம் முதல் பலமுகம் கொண்ட ருத்ராட்சங்கள் இருக்கின்றன.

News image
Updated On :11 ஜூலை 2017, 12:41 pm IST

ருத்திராட்சம் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகும். ருத்திராட்சத்தில் ஒரு முகம் முதல் பலமுகம் கொண்ட ருத்ராட்சங்கள் இருக்கின்றன. ருத்ராட்சத்தை வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

குழந்தைகள் ருத்திராட்சம் அணிந்து கொள்வதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்திராட்சத்தை பெண்கள் அணிந்து கொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். மேலும் இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும் ருத்ராட்சம் அணிவதால் மனமும், உடலும் தூய்மை அடைகின்றது.

ருத்திராட்சத்தை அணியும்போது எத்தனை முகம் கொண்ட ருத்திராட்சம் ஏற்றது என்பதை அறிந்து அணிய வேண்டும். அந்த வகையில் ஜோதிட ரீதியாகப் பார்க்கும்போது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் 27 நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில்தான் பிறந்திருப்பார்கள்.

இந்த 27 நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த முகம் கொண்ட ருத்திராட்சத்தை அணிய வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

1 அசுவினி - 9 முகம்

2 பரணி - 6 முகம், 13 முகம்

3 கார்த்திகை - 12 முகம்

4 ரோகிணி - 2 முகம்

5 மிருகசீரிஷம் - 3 முகம்

6 திருவாதிரை - 8 முகம்

7 புணர்பூசம் - 5 முகம்

8 பூசம் - 7 முகம்

9 ஆயில்யம் - 4 முகம்

10 மகம் - 9 முகம்

11 பூரம் - 6 முகம், 13 முகம்

12 உத்திரம் - 12 முகம்

13 ஹஸ்தம் - 2 முகம்

14 சித்திரை - 3 முகம்

15 சுவாதி - 8 முகம்

16 விசாகம் - 5 முகம்

17 அனுஷம் - 7 முகம்

18 கேட்டை - 4 முகம்

19 மூலம் - 9 முகம்

20 பூராடம் - 6 முகம், 13 முகம்

21 உத்திராடம் - 12 முகம்

22 திருவோணம் - 2 முகம்

23 அவிட்டம் - 3 முகம்

24 சதயம் - 8 முகம்

25 பூரட்டாதி - 5 முகம்

26 உத்திரட்டாதி - 7 முகம்

27 ரேவதி - 4 முகம்

27 நட்சத்திரங்களில் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குக் குறிப்பிட்டுள்ள ருத்திராட்ச முகங்களை அணிந்து கொண்டால் சிவபெருமானின் அருளால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று வாழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.