கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பர். அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மைப் பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுவிட்டது என்பர். கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர். பிறருடைய பார்வை மட்டும் அல்ல நம்மோட பார்வையே கூட சில சமயம் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதில் இருந்து தப்பிப்பதற்கு அதற்கான பரிகாரங்கள் செய்வதன் மூலம் திருஷ்டி ஏற்படாமல் தப்பிக்கலாம்.
நல்ல வளப்பமாக ஆரோக்கியமாக வாழும் ஒருவர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இளைத்துப் போகலாம். எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே என்று பேசிக்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் குன்றிய அவருக்கு எப்படி திருஷ்டி சுற்றுவது? மூன்று தெருக்கள் கூடுமிடத்திலிருந்து சிறிது மண் எடுத்துக் கொள்ளுங்கள் ஒன்பது காய்ந்த மிளகாய் ஒருபிடி உப்பு, கொஞ்சம் கடுகு ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு ஒரு கொட்டாங்குச்சி அல்லது இரும்பு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு முச்சந்தி மண்ணையும் அதனோடு போட்டு உடல் நலம் குன்றியவரை கிழக்குப் பார்த்து அமரச் செய்து இடமிருந்து வலமாக மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி கண்பட்ட திருஷ்டிகள் கடுகுபோல வெடிக்கட்டும் என்று சொல்லியவாறு சுற்றி கடவுளை வேண்டிக் கரி ஆடுப்பு பற்றவைத்து அந்தத் தணலில் போடுங்கள். பிறகு கால்களை கழுவிக்கொண்டு விபூதி பூசிக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கும் பூசினால் விரைவில் குணமடைவார்.
பொறாமையினால் வரும் திருஷ்டி!
உங்களுடைய உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த புகழினால் கூடத் திருஷ்டி உண்டாகும். பரபரப்பாகச் செயல்பட்ட நீங்கள் சட்டென மந்தமாகச் செயல்பட நேரிடும். திடீர் மந்தர் இந்தத் திருஷ்டியினால் தான் ஏற்படும். இதற்குப் பரிகாரம் படிகாரம் சுற்றிப்போடுவது தான். கடையில் பெரிய படிகாரக் கட்டி ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். திருஷ்டிக்கு ஆளானவரை கிழக்கு நோக்கி உட்காரவைத்து படிகார கட்டி ஒன்றினால் இடமிருந்து வலம், வலமிருந்து இடம் மூம்மூன்று முறை சுற்றி தலையில் இருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி வீட்டின் பின்புறம் தணல் பற்றவைத்து அதில் படிகாரத்தை
போட்டுவிடுங்கள். மறுநாள் அதை முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பாராமல் வீட்டுக்கு வந்து கை, கால் கழுவி விபூதி பூசிக் கொள்ளுங்கள். படிகாரத்தை நீரிலும் போடலாம். அப்படிச் செய்தால் அதனை பிறர் கால் படாத இடத்தில் ஊற்றவும்.
உங்கள் வியாபாரத்தலம் அல்லது அலுவலகத்தில்!
முறையாகத் திட்டம் தீட்டியும் அலுவலகம் அல்லது தொழிலிடத்தில் இறங்குமுகமா? அந்தத் திருஷ்டிக்கான பரிகாரம்...
வளர்பிறை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் கடற்கரைக்கு சென்று பெரிய கேன் அல்லது பாட்டிலில் கடல் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வடிகட்டி, வடிகட்டிய நிரை எடுத்துச் சென்று உங்கள் அலுவலகம், தொழில் செய்யும் இடத்தில் குறிப்பாக உங்கள் அறையில் தெளியுங்கள். இதில் முக்கியமான விஷயம் இதை பிறரைக் கொண்டு செய்யக் கூடாது. பாதிக்கப்பட்டவரே செய்ய வேண்டும். இவ்வாறு மாதம் ஒருமுறை செய்து பாருங்கள் திருஷ்டி விலகி தொழில் சிறப்பாக வளரும்.
வந்த திருஷ்டிக்கு பரிகாரம் பார்த்தோம்! இனி திருஷ்டி வராமல் இருக்கப் பரிகாரம்...
சிறப்பாக வியாபாரம் நடக்க...உங்களுடைய வியாபாரத் தலம் அல்லது அலுவலகத்தில் கறுப்பு கம்பளிக் கயிற்றில் படிகாரத்துடன் ஊமத்தங்காய் அல்லது தும்மட்டிக்காய் சேர்த்துக் கட்டி அத்துடன் ஏழு மிளகாய்களைக் கோர்த்து கடைசியாக சிறிய படிகாரத்தையும் சேர்த்துக் கட்டி வாசலில் தொங்கவிடுங்கள். இந்தப் படிகாரம் கொஞ்சம் கரைந்ததும் அல்லது நாளானதும் மீண்டும் புதிதாய் கட்டுங்கள். மேலும், முக்கிய விஷயம் கடையை திறந்ததும் இரண்டு ஊதுபத்தி ஏற்றி கடவுளை வணங்கவும். மூடும் போது வாசலில் கற்பூரம் ஏற்றவும் அப்புறம் பாருங்க உங்க வியாபாரம் செழிக்கும்.
மாதா மாதம் கழிக்கும் திருஷ்டி!
அமாவாசை அன்று திருஷ்டி கழிக்கிறேன் என்று தேங்காயையும், பூசனிக்காயையும் உடைத்து நடு ரோட்டில் போடாதீர்கள். அதற்கு மாறாகத் தேங்காய் உடைப்பவர்கள் அன்றைக்கு காலையிலேயே தேங்காயை எடுத்து சாமி படத்து முன்னாடி வைத்து விட வேண்டும். மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து தேங்காய் பக்கத்தில் வைத்து விடுங்கள். இரவு போகும் போது, மஞ்சள் தண்ணீரில் தேங்காயை நனைத்து அதன் மேல் கற்பூரம் எற்றி சுற்றி வாசலில் ஒரு ஓரமாக உடைக்கலாம். உடைக்கும் தேங்காய் மற்றவர்கள் உபயோகப்படுத்த வேண்டும் அல்லது ஈ, எறும்பாவது சாப்பிட வேண்டும். அதுதான் நல்லது. மஞ்சள் தண்ணீரை தலையில் தெளித்துக்கொண்டு உள்ளே வரவும். இப்படி ஒவ்வொரு அமாவாசையும் செய்து வாருங்கள் வாணிபம் வளர்பிறையா வளரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

முதியவரைத் தள்ளிய பாதுகாவலர்! கோபப்பட்டு திட்டிய விஜய்!

மேட்டுப்பாளையத்தில் ஜாலியாக உலா வந்த பாகுபலி!

புதுச்சேரியில் விஜய் சாலைவலம்! | Vijay | TVK
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


