காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் மூன்று வித நன்மைகள்
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம். காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது.


காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம். காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது. நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வைக்க வேண்டும் என்கின்றனர் நம் முன்னோர்கள் அது எதற்காக? என்பதைப் பார்ப்போம்.
நம்முடைய முன்னோர்கள் இறந்த பிறகு அவர்களுடைய ஆன்மாக்கள் அவர்கள் குடும்பத்தைக் காண வசித்த இடத்தைத் தேடி வரும் என்பது நம்பிக்கை. அப்போது, நேரடியாக வராமல் காகத்தின் ரூபத்தில் வருவதாகக் கூறப்படுகிறது. நம் முன்னோர்களை நினைத்து தினமும் ஒரு பிடி சாதம் காக்கைக்கு வைக்க வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால், அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களிளாவது முன்னோர்களின் பெயர்களை சொல்லி அவர்களுக்கு எள்ளும் தண்ணியும் வைத்துத் திதி கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மனம் குளிர்வதோடு, வயிறும் குளிர்ந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.
நம் முன்னேற்றத்திற்கும், முன்னோர்களின் ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்குத் தினசரி உணவிட வேண்டும் என்ற பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன்-மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும். காகம் சனீஸ்வர பகவானின் வாகனம் என்பதால் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்தும் விடுபடலாம். இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். ஏழரை சனி நடைபெறும் காலங்களில் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பதன் மூலம் ஏழரை சனியின் தாக்கம் சற்றே குறையும்.
காகத்திற்கு நாம் உணவிடும் போது உணவையும் சாப்பிடுவதுடன், வீட்டுச் சுற்றுவட்டாரத்தில் ஏதேனும் பூச்சிகள் இறந்து கிடந்தால் அவற்றையும் அப்புறப்படுத்தவும் செய்கிறது. இதனால் நோய்கிருமிகள் நம்மைத் தாக்காதிருக்க உதவுகிறது. காகத்திற்கு உணவளிக்கும் பொழுது, காகமானது தன் கூட்டத்தையே அழைத்து வந்து உணவைப் பகிர்ந்து கொள்கின்றன. இதனைப் பார்க்கும் போது நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. காகத்திற்கு உணவு வைப்பதால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைப்பதோடு, சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும், சனிபகவானின் அருளும் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...