பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் வருண ஜப பூஜை

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் மழை வேண்டி வருண ஜப பூஜைகள் இன்று நடைபெற்றது.

News image
Updated On :22 மே 2017, 8:43 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் மழை வேண்டி வருண ஜப பூஜைகள் இன்று நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் மற்றும் அதிமுக நிர்வாகிகள்,  பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

காலை 6 மணிக்கு நித்தயபடி பூஜையும், 7 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும், 7.30-க்கு யாக சாலை பூஜையும் நடத்தப்பட்டது. பின்னர் வருண மூல மந்திரம் 1008 முறை கூறி 7 பட்டாச்சாரியார்கள் வருண ஜெபம் நடத்தினர்.

மூலிகை திரவியங்களை கொண்டு யாக சாலை பூஜை நடத்தப்பட்டது. 9 கலசங்கள் வைத்து வருண பகவானின் வேத மந்திரம் கூறி வேண்டினர். நாதஸ்வரம் மூலம் அமிர்த்தவர்ஷினி யாகம் வளர்த்து (ஆண்டாள் பாடி அருளிய ஆழி மலை கண்ணா) பாசுரத்தைப் பாடி கூட்டு பிராத்தனை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.