அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஐப்பசி மாத முக்கிய விழாவான கடை முக தீர்த்தவாரி இன்று

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறவுள்ள காவிரி மகா புஷ்கரத்தின் முக்கிய விழாவான கடை முக தீர்த்தவாரி விழா இன்று மதியம் நடைபெறுகிறது. 

News image
Updated On :16 நவம்பர் 2017, 11:07 am

தினமணி


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறவுள்ள மயூரநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத முக்கிய விழாவான கடை முக தீர்த்தவாரி விழா இன்று மதியம் நடைபெறுகிறது. 

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஐப்பசி மாத உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், இவ்வாண்டு துலா உற்சவம் கடந்த அக்.,18-ம் தேதி முதல் தீர்த்தவாரியுடன் தொடங்கியது. 

இதில் கடைசி பத்தநாள் உற்சவம் கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13-ம் தேதி திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இத்தனர். 

முக்கிய நிகழ்வான இன்று கடைமுக தீர்த்தவாரி விழா (நவ.,16) மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது. நாளை 17-ம் முடவன் முழுக்கு உற்சவம் நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.