நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சனி தோஷத்தை நீக்கும் புரட்டாசி சனிக்கிழமை!

சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத் தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். கன்னி ராசியின் அதிபதியான....

News image
Updated On :7 அக்டோபர் 2017, 5:49 am

தினமணி

சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத் தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். கன்னி ராசியின் அதிபதியான புதனின் அதிதேவதை விஷ்ணு. புரட்டாசியில் பெருமாளை வழிபடுவதால் புதனின் அருளும் நமக்குப் பரிபூரணமாக கிடைக்கும்.

சனி தோஷம் நீக்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்....

• புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகாவிஷ்ணுவையும் வழிபடுவதால் சனி, ராகு, கேதுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும். புதனின் நட்புக்கிரகம் சனி. எனவே இவரை வழிபடுவதால் சனி தோஷம் நீங்கும்.

•  புதன் சகல கலைகளிலும் வல்லவர். புதன் புத்திக்கூர்மை, கற்றல் போன்றவற்றுக்கு அதிபதி. ஆகையால் இவரை வழிபடுகிறவர்களுக்கு அறிவைக் கொடுப்பார்.

• புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பைத் தரும். 

• இனிப்பும், எள்ளும் கலந்து காகத்திற்கு உணவு அளிக்கலாம். இதன் மூலம் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

• புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழித்து துன்பங்கள் விலகும்.

• புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

• சனிக்கிழமை அன்று முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் சிறப்பு. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயர், சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். காகத்திற்கு அன்று வாழை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும். 

• ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.