‘நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். எந்த நேரத்தில் என்ன செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள் வகைப்படுத்தியுள்ளனர். ஜோதிடத்தில் ஹோரை என்று குறிப்பிடுவது அந்த நேரத்தைத்தான்.
நாம் செய்ய விரும்பும் காரியங்களை எந்த ஹோரையில் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை இந்த ஹோரை நேரம் நமக்கு வழிகாட்டுகிறது. காலை ஆறு மணிக்கு இந்த ஹோரை நேரம் துவங்குகிறது. சரி, குரு ஹோரையில் என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
குரு ஹோரையில் ஆலயங்களுக்குச் செல்லலாம். ஆன்மிக விஷயங்களில் ஈடுபடலாம். சான்றோர்களைச் சந்திக்கலாம். ஆன்மிக குருவைச் சந்திக்கலாம். தான தருமங்கள், புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். குரு பூஜை செய்ய, பாட்டு மற்றும் நடனம் ஆரம்பிக்க, திருமணம் செய்ய, கடை திறப்பு விழா மேற்கொள்ள, வங்கியில் பணம் போட, தங்க ஆபரணங்கள் வாங்க, ஆன்மிகவாதிகளைச் சந்திக்க அல்லது சித்தர்களைக் காண நல்ல நேரமாகும்.
குருபலம்:
ஒருவரின் ராசியிலிருந்து (சந்திர பகவானிருக்குமிடம்) குருபகவான் 2,4,7,9,11-ம் ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் குருபலம் கூடும் காலமென்று கூறுகிறோம். குருபகவான் வக்கிரம் பெற்று சஞ்சரிக்கும் காலமான சராசரியாக நான்கு மாதங்கள் மற்ற ராசிக்காரர்களுக்கும் குருபலன் உண்டாகும் என்று கூறலாம்.
குருபகவான் ஆட்சி, உச்சம் பெற்று அமரும் போது மூன்று லட்சம் தோஷங்கள் மறைகிறது என்று கூறுவர். குருபகவானின் பார்வையினால் புத்திர தோஷம், களத்திர தோஷம், பிதுர் தோஷம் ஆகியவை மறைந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருமண மோசடி: பெண்களை ஏமாற்றிய ஐவரி கோஸ்ட் நாட்டவா் உள்பட இருவா் கைது
சேவை தடைபடக் கூடாது!

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



