அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேற இன்று செய்ய வேண்டிய வராஹி அம்மன் வழிபாடு!

பஞ்சமி திதியான இன்று ஸ்ரீவராஹி அம்மனை பூஜித்து வழிபட வேண்டிய நாள். வராஹி அம்மன் உள்ள ஆலயத்தில் இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும் 

News image
Updated On :6 மார்ச் 2018, 6:11 am

தினமணி


பஞ்சமி திதியான இன்று ஸ்ரீவராஹி அம்மனை பூஜித்து வழிபட வேண்டிய நாள். வராஹி அம்மன் உள்ள ஆலயத்தில் இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும் 

சப்தகன்னியரில் ஒருவரான ஸ்ரீவராஹி மிகவும் சக்தி வாய்ந்தவள். லோகமாதா பராசக்தியின் மறு வடிவம் என்று போற்றுகிறது புராணம். தஞ்சைப் பெரியகோயில் உள்ளிட்ட சில ஆலயங்களில் ஸ்ரீவராஹி தேவிக்கு தனி சந்நிதி உள்ளது. 

இங்கு, பஞ்சமி திதியில் அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். இன்று பஞ்சமி திதியை முன்னிட்டு, ஸ்ரீவராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். இதன் பிறகு அன்னைக்கு சர்வ அலங்காரங்கள் செய்து, பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

ஸ்ரீ வராஹி அம்மனுக்கு உகந்த செம்பருத்தி, செவ்வரளி, மல்லி போன்ற மலர்கள் சார்த்தி அன்னையை வழிபாடு செய்யலாம். பெண்கள் நினைத்தது நிறைவேற குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்தனையை செய்வார்கள். மேலும், சிறப்பாக பூசனிக்காயை சமமாக வெட்டி அதில் நல்லென்ணை போட்டு விளக்கேற்றுவார்கள்.

பஞ்சமி திதி நாளில், ஸ்ரீவராஹி தேவியை வணங்கி வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். வழக்கு முதலான காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

இதேபோல், திருச்சி பொன்மலை நார்த் டி ரயில்வே காலனி குடியிருப்புப் பகுதியில் அமைந்து உள்ள விநாயகப் பெருமான் கோயிலில், ஸ்ரீவராஹி தேவிக்கு சனி சந்நிதி உள்ளது. இங்கேயும் அன்னைக்கு சிறப்பு பூஜைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.