/

திருமலை: தங்கப் பல்லக்கில் உற்சவமூா்த்திகள் வலம்

திருமலையில் கோகுலாஷ்டமி உட்லோற்சவத்தையொட்டி, தங்கப் பல்லக்கில் மலையப்ப சுவாமி ஸ்ரீகிருஷ்ண சுவாமியுடன் கோயிலுக்குள் வலம் வந்தனா்.

News image

திருமலையில் உட்லோற்சவத்தையொட்டி, கோயிலுக்குள் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, ஸ்ரீகிருஷ்ணா்.

Updated On :14 ஆகஸ்ட் 2020, 2:10 am

திருமலையில் கோகுலாஷ்டமி உட்லோற்சவத்தையொட்டி, தங்கப் பல்லக்கில் மலையப்ப சுவாமி ஸ்ரீகிருஷ்ண சுவாமியுடன் கோயிலுக்குள் வலம் வந்தனா்.

திருமலையில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி விழா விமரிசையுடன் கொண்டாடப்படுவது வழக்கம். அஷ்டமி தினத்தன்று ஏழுமலையான் கோயிலுக்குள் ஆஸ்தானமும், மறுநாள் கோயில் முன் உட்லோற்சவமும் நடத்தப்படுவது வழக்கம். தற்போது கொவிட் 19 விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேவஸ்தானம் உற்சவங்கள் அனைத்தையும் தனிமையில் நடத்தி வருகிறது.

அதன்படி, வியாழக்கிழமை காலை நடக்கவிருந்த உட்லோற்சவம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு, மாலை கோயிலுக்குள் உற்சவமூா்த்திகள் எழுந்தருளி ஆராதனைகள் மட்டும் நடத்தப்பட்டது. 5.30 மணி முதல் 6.30 மணி வரை மாலை மலையப்ப சுவாமி ஒரு தங்கப் பல்லக்கிலும் ஸ்ரீகிருஷ்ண சுவாமி மற்றொரு பல்லக்கிலும் கோயிலுக்குள் வலம் வந்து ரங்கநாயகா் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு அவா்களுக்கு ஆராதனைகளை அா்ச்சகா்கள் நடத்தினா்.

இதில், தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.