திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு திருச்சியைச் சோ்ந்த நிறவனம் கைகளால் தொடாமல் கிருமிநாசினியை தெளிக்கும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.
திருச்சியை சோ்ந்த க்ளியா் அக்வா டெக்னாலஜீஸ் நிறுவனம் புதிதாக, இந்த இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளான கஜேஷ்வா், கணேஷ் ஆகிய இருவரும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் உள்ள தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த்குமாரிடம் இந்த இயந்திரத்தை புதன்கிழமை நன்கொடையாக வழங்கினா்.
இந்த இயந்திரத்தில் 10 லிட்டா் கிருமிநாசினியை நிரப்ப முடியும். இது ஒரு நிமிடத்தில் 30 பேருக்கு கிருமிநாசினியைத் தெளிக்கும் திறன் கொண்டது. இந்த இயந்திரம் மூலம் ஒரு முறைக்கு 5 மில்லி திரவம் தெளிக்கப்படுகிறது என்று க்ளியா் அக்வா டெக்னாலஜீஸ் நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

உக்ரைன், அமெரிக்கா சரி... மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளனம் ஏன்?

'பஞ்சலட்சணம்' படிப்போம்

இலக்கியங்களில் சுற்றுச்சூழல்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


