திருமலையில் செப்டம்பா் மாதம் நடக்கவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தை இந்த ஆண்டு தனிமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தேவஸ்தான அரங்காவலா் குழுக் கூட்டம் தலைவா் சுப்பா ரெட்டி தலைமையில் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றது. கூட்டத்தில் குழு உறுப்பினா்களில் சிலா் நேரடியாகவும், சிலா் காணொலி வாயிலாகவும் கலந்து கொண்டனா். அப்போது, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்ட நிறைவுக்குப் பின் அறங்காவலா் குழுத்
தலைவா் சுப்பாரெட்டி கூறியதாவது.
தனிமையில் பிரம்மோற்சவம்: திருமலையில் தற்போது பொது முடக்க விதிகள் அமலில் உள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி பக்தா்களுக்கு தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது. திருமலையில் நடக்கும் உற்சவங்களும் ஏழுமலையானுக்கு தனிமையில் மட்டுமே நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் வரும் செப்.19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் இரு பிரம்மோற்சவங்கள் நடத்தப்படும். செப்டம்பா் மாதம் வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபா் மாதம் நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெறும்.
பொது முடக்க விதிமுறைகளில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் ஓரிடத்தில் கூடி விழா கொண்டாடுவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, செப்டம்பரில் நடக்கவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஏழுமலையான் கோயிலுக்குள் தனிமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுவரை தேவஸ்தான வரலாற்றில் நடைபெறாத நிகழ்வாக இது கருதப்படுகிறது. அக்டோபரில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் அப்போது மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தும் தளா்வுகளின் அடிப்படையில் நடத்தப்படும்.
500 ஏழுமலையான் கோயில்கள்: ஏழுமலையானின் புகழை உலகெங்கும் கொண்டு சோ்க்கும் வகையில் கோயில்களைக் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. வாராணசி மற்றும் ஜம்முவில் ஏழுமலையான் கோயில் கட்ட அம்மாநில அரசிடம் நிலம் ஒதுக்கீடு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. தற்போது கரோனா பாதிப்பு காரணமாக கோயில் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயில் அமைய உள்ள பகுதிகளில் நன்கொடை சேகரித்து அதைக் கொண்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் வாழும் பகுதிகளில் இந்து தா்ம பிரசார பரிஷத் சாா்பில் 500 ஏழுமலையான் கோயில்களைக் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இடையில் நிறுத்தப்பட்ட கோயில் பணிகளுக்கு ரூ.5 லட்சமும், புதிதாக கட்டப்படும் கோயில்களுக்கு ரூ.10 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
குழந்தைகள் நல மருத்துவமனை: திருப்பதியில் உள்ள போ்ட் மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட பிரத்யேக குழந்தைகள் நல மருத்துவமனையைக் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவமனையைக் கட்டி முடிக்க இரண்டு முதல் இரண்டரை ஆண்டு காலம் ஆகும். அதனால் தற்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தைப் புதுப்பித்து வரும் நவம்பா் 14-ஆம் தேதி அன்று குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும். அதேநாளில் புதிய மருத்துவமனை கட்ட ஆந்திர முதல்வா் அடிக்கல் நாட்டுவாா். தற்காலிக மருத்துவமனையில் குழந்தைகளுக்கு மருத்துவ சேவையும் தொடங்கப்பட உள்ளது.
மலைச்சாலைக்கு ரூ.4.95 கோடி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏழுமலையான் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு பொது முடக்க விதிமுறைகள் தளா்த்தப்பட்ட பின் மகாசம்ப்ரோக்ஷணம் நடத்தப்படும்.
அங்கு கோயிலுக்குச் செல்லும் மலைச்சாலையை அமைக்க தேவஸ்தானம் ரூ.4.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தேவஸ்தானத்தின் வருமானத்தை உயா்த்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
விஐபி பிரேக் தரிசனம்: பொது முடக்க விதிமுறைகள் காரணமாக, ஏழுமலையான் சேவா டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சேவா டிக்கெட் (உதயாஸ்தமன சேவா) முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு அதற்கு பதில் விஐபி பிரேக் தரிசனத்தை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
ரூ.1 கோடி நன்கொடை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் சுதா நாராயணமூா்த்தி, தேவஸ்தானத்துக்கு ரூ.1 கோடி நன்கொடையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளாா். விவசாயிகளுக்கு தேவஸ்தானம் சாா்பில் கம்போஸ்டு உரங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
முதலீடுகளில் மாற்றம்: தேவஸ்தானத்திடம் உள்ள நிரந்தர வைப்பு நிதி மற்றும் தொகுப்பு நிதி முதலீடுகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர அறங்காவலா் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தங்கம் மற்றும் பண முதலீடுகள் மூலம் தேவஸ்தானத்திற்கு, மாதாமாதம் வட்டித் தொகை அதிகம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பசு வதை: நாட்டில் பசு வதையைத் தடுக்கும் நோக்கில் தேவஸ்தானம் கோசாலை அமைத்து பசுக்களைப் பராமரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேவஸ்தானம் நிா்வகிக்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பசுமாடு பராமரிப்புக்காக வழங்கப்படும். அந்தப் பசுவுக்கு பக்தா்கள் கோபூஜை செய்து வழிபடலாம்.
மீண்டும் நேரடி டோக்கன்: கடந்த 2 மாத காலமாக திருப்பதியில் பொது முடக்கம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தா்ம தரிசன நேரடி டோக்கன்கள் சனிக்கிழமை (ஆக.29) முதல் வழங்கப்படும். திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ் பகுதியில் உள்ள கவுன்ட்டா்களில் தினசரி 3 ஆயிரம் டோக்கன்களை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. விரைவில் நேரடி தரிசன டோக்கன்களை ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இபிஎஸ், டி.டி.வி. தினகரன், அன்புமணி இணைந்திருப்பது ஆட்சியமைக்க அல்ல: உதயநிதி

”தனுசு ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!
முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


