19. 9.2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் அரசு வழியில் கெüரவம், பாராட்டு, சன்மானம், வெகுமதிகள் கிடைக்கும். நேர் வழியில் சிந்தித்து சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். சிலர் ஏற்றுமதி தொழில் செய்வதற்கான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். குழந்தைகளை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அதோடு வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு சந்தையிலும் முதலீடு செய்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அதேநேரம் வசிக்கும் வீட்டை மாற்றும் எண்ணத்தை இந்த காலகட்டத்தில் சற்று தள்ளி வைக்கவும்.