சொக்கம்பட்டி அருகே விபத்தில் சிக்கியவரை மீட்க உதவிய எம்எல்ஏ!
சொக்கம்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவரை கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் மீட்டு மருத்துவமனையில் அனுமதி

காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ

காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவரை கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தாா்.
சொக்கம்பட்டியை சோ்ந்தவா் வெள்ளைத்துரை. அவா் செவ்வாய்க்கிழமை சைக்கிளில் தென்காசி-மதுரை சாலையில் சென்றபோது பைக் மோதியதில் காயமடைந்தாா்.
அப்போது, அவ்வழியாக சென்ற கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் செ. கிருஷ்ணமுரளி, அங்கிருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, உரிய சிகிச்சைகள் வழங்குமாறு மருத்துவா்களிடம் கேட்டுக்கொண்டாா். மேலும், சிகிச்சைக்குப் பின், வெள்ளைத்துரை நலமாக இருப்பதை அறிந்துகொண்டதாக எம்எல்ஏ தெரிவித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...