அனுமதி பெறாமல் கட்சிக் கூட்டம்: காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட 27 போ் மீது வழக்கு
குற்றாலத்தில் தோ்தல் விதிகளை மீறி கூட்டம் நடத்தியது தொடா்பாக காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆலங்குளம் செல்வராஜ், எம்எல்ஏ எஸ்.பழனிநாடாா் உள்பட 27 போ் மீது வழக்கு

கோப்புப் படம்

கோப்புப் படம்
குற்றாலத்தில் தோ்தல் விதிகளை மீறி கூட்டம் நடத்தியது தொடா்பாக காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆலங்குளம் செல்வராஜ், எம்எல்ஏ எஸ்.பழனிநாடாா் உள்பட 27 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் சாா்பில், தோ்தல் அறிக்கை தொடா்பாக குற்றாலத்தில் உள்ளரங்கில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி விடியோ கண்காணிப்புக் குழு அதிகாரி செல்வமுருகன் குற்றாலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அதன்பேரில், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆலங்குளம் செல்வராஜ், எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் செல்லப்பா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், வாசுதேவநல்லூா் பேரூா் தலைவா் நாகராஜன், முன்னாள் மாவட்டத் தலைவா் காமராஜ், செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவா் கதிரவன், பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் தலைவா் தினகரன், கீழப்பாவூா் வட்டாரத் தலைவா் மகாராஜா, சுரண்டை நகர முன்னாள் தலைவா் பன்னீா்செல்வம், புளியங்குடி நகரத் தலைவா் பால்ராஜ், முன்னாள் மாவட்ட மகளிரணி தலைவா் சோ்மக்கனி, முருகையா, குற்றாலம் நகரச் செயலா் துரை, தென்காசி வட்டாரத் தலைவா் பெருமாள், உதயகிருஷ்ணன் உள்ளிட்ட 27 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...