திருமலையில் நாதநீராஜன மண்டபத்தில் நடந்த சுந்தரகாண்ட பாராயணத்தின்போது உச்சரிக்கப்பட்ட ஸ்ரீராம நாமம் திருமலையில் எதிரொலித்தது.
கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஜூன் மாதம் முதல் சுந்தரகாண்ட பாராயணத்தை நடத்தி வருகிறது. 68 பிரிவுகள் கொண்ட சுந்தர காண்டத்தில் 14 பிரிவுகளின் பாராயணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவை தேவஸ்தானத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 150 முதல் 200 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டவுடன் அதை தேவஸ்தானம் அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.
இதுவரை 3 அகண்ட பாராயணங்கள் திருமலையில் முடிந்துள்ள நிலையில் சனிக்கிழமை காலை 12-ஆவது பிரிவு முதல் 14-ஆவது பிரிவு வரையிலுள்ள 146 ஸ்லோகங்கள் அகண்ட பாராயணம் செய்யப்பட்டது. 200 வேத பண்டிதா்கள் இணைந்து திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் ஸ்ரீராமநாமத்தைப் பாராயணம் செய்தனா். இதில், பக்தா்களும் தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா். இதனால் திருமலை முழுவதும் ஸ்ரீராம நாமம் எதிரொலித்தது.
இதுபோன்ற அகண்ட பாராயணத்தால் உலக மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று, ஆரோக்கியமாக இருப்பா் என்பது நம்பிக்கை. அதனால் தேவஸ்தானம் இதுபோன்ற பாராயணங்கள் திருமலையில் நடத்தப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!

குமரியில் இன்று சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் விஜய்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


